EPFO New Method Updates: இபிஎப் என்ற அமைப்பு அதன் உறுப்பினர்களின் நலனுக்காக புதிய அம்சங்கள் கொண்டு வந்துள்ளது. இதில் இபிஎப் கணக்கில் உள்ள முக்கியமான தகவல்களை மாற்றுவது தற்போது மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடிகிறது.
முன்னதாக இபிஎப் விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய உங்கள் நிறுவனத்தின் அல்லது முதலாளியின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இபிஎப்ஓ அமைப்பு தன்னுடைய அதிகாரப்பூர்வ போர்டல் மூலம் அந்த தடையை நீக்கி உள்ளது.
இனி இபிஎப் கணக்கில் உள்ள விவரங்களை நீங்கள் நேரடியாக மாற்றலாம் உங்கள் பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, தந்தை அல்லது கணவரின் பெயர், ஓய்வு பெறும் தேதி உள்ளிட்ட பல முக்கிய விவரங்களை எவ்வித ஒப்புதலும் இல்லாமல் மாற்ற முடியும். இதன் மூலம் இபிஎப்ஓ தனது உறுப்பினர்களுக்கு அதிக சுதந்திரம் மற்றும் வசதியை வழங்கியுள்ளது.
எப்படி இந்த புதிய வசதி செயல்படுகிறது என்றால்? முதலாவதாக இபிஎப்ஓ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உள்நுழைய வேண்டும். உள்நுழைவதற்கு உங்கள் யுஏ எண் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தவும்.
உள்நுழைந்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மூலம் அங்கீகாரம் பெற வேண்டும். அதன் பிறகு மேனேஜ் என்ற ஆப்ஷனில் சென்று மாடிபைபேசிக் டீடெயில்ஸ் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து உங்கள் தகவல்களை மாற்றலாம்.
இந்த மாற்றத்திற்கு தேவையான ஆவணங்களையும், அதாவது ஆதார் கார்டு அட்டை, பான் அட்டை அல்லது பிறப்பு சான்றிதல் போன்றவை பதிவேற்ற வேண்டும்.
இபிஎப் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்.
இந்த புதிய விதி லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பல நன்மைகள் தரும். முன்பு தவறான தகவல்களை சரி செய்ய தாமதமான ஒப்புதல்கள் அல்லது உதவியின் காரணமாக பிரச்சனைகள் ஏற்படுவதாக இருந்தது.
இப்போது இபிஎஓவின் இந்த புதிய வசதி ஊழியர்களுக்கு அவர்களின் இபிஎப் விவரங்களை தாமதமின்றி மற்றும் எளிதாக புதுப்பிக்க உதவுகிறது. இந்த மாற்றம் இபிஎப்ஓ உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நன்மையாக உள்ளது.
அவர்கள் எதிர்கால ஓய்வூதியம் மற்றும் பிஎப் கோரிக்கைகள் குறித்து எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்காமல் தங்களுடைய விவரங்களை சரியாக மற்றும் நேரடியாக புதுப்பிக்க முடியும்.
மேலும் படிக்க - EPF Claim நிராகரிக்கப்படாமல் இருக்க... கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
மேலும் படிக்க - EPFO New Rules: PF கணக்கில் தனிப்பட்ட தகவல்களை திருத்தலாம்... எளிய வழிமுறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









