நேற்று பிரதமர் மோடியால் பிராண பிரதிஷ்டை செய்து திறந்து வைக்கப்பட்ட ராமர் கோயிலில் காலை 8 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் கோயில் தரிசனம் செய்யலாம். இந்த தகவல் அனைவருக்கும் தெரிந்தாலும், அதிகாலை 3 மணியில் இருந்தே கோயிலுக்கு வெளியே மக்கள் குழுமிவிட்டனர். ராமரை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கும் மக்கள் குளிரையும் மூடுபனியையும் தாங்கிக் கொள்ளும் அதிகாலை காட்சிகள் மக்களின் ராமர் தரிசனத்திற்கான ஆர்வத்தைக் காட்டுகின்றன. நேற்று கோயில் கமிட்டியினர் தரிசன நேரத்தை மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமர் கோயிலில் முதல் நாள் பொது தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராமர் கோவில் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனம் இன்று தொடங்கியது. இன்று காலை தொடர்ங்கிய முதல் பொது தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வரிசையில் நின்றனர். பெரும்திரளான கூட்டத்தினால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்தார்கள். இருப்பினும் பக்தர்களின் ஆர்வம் குறையவில்லை.



காலை 8 மணிக்கு நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டதும், பக்தர்கள் தரிசனத்திற்காக உள்ளே சென்றனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தரிசன நேரத்தை நேற்று கோயில் கமிட்டியினர் மாற்றியமைத்தனர்.  


ராமர் கோவில் தரிசன நேரம்
ராம் லல்லா எனப்படும் குழந்தை ராமரின் தரிசனம் காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை செய்யலாம். மதியம் 1 மணி முதல் 3 மணி வரை கோவில் தரிசனத்திற்காக மூடப்படும்.


மேலும் படிக்க - அயோத்தி ஸ்ரீராமரை தரிசிக்க... நேரம் & முன்பதிவு விபரங்கள்!


குழந்தை ராமருக்கு பிரசாதம்


ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வழங்கிய தகவல்களின்படி, ராமருக்கு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பழங்கள் மற்றும் பால் வழங்கப்படும். கோவில் தினமும் திறந்திருக்கும்.


முதல் மாலை ஆரத்தி
நேற்று மாலை ராம் லல்லாவுக்கு முதல் மாலை ஆரத்தி செய்யப்பட்ட காட்சிகள் அனைவரையும் பரவசப்படுத்தின. கோவில் பூசாரிகள் பூஜை செய்யும் போது பக்தர்கள் பஜனை மற்றும் ஆரத்தி பாடி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையை கொண்டாடினார்கள்.



ஆலயத்தில் குழந்தை ராமர் சிலை  
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டை எனப்படும் குழந்தை ராமர் சிலையை ஆலயத்தில் நிர்மாணம் செய்து வழிபாடுகளைத் தொடங்கும் விழாவில் சடங்குகளை நடத்தினார். இந்த விழா கொண்டாட்டத்தின் தருணம் மட்டுமல்ல, இந்திய சமுதாயத்தின் முதிர்ச்சியையும் குறிக்கும் தருணம் என்று கூறிய பிரதமர் மோடி, நமது நாடு இந்த வரலாற்றின் முக்கியமான தருணத்தை சிறப்பாக கொண்டாடுவதாக தெரிவித்தார்.


எதிர்காலம் நமது கடந்த காலத்தை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, இந்த சந்தர்ப்பம் வெற்றியைப் பற்றியது மட்டுமல்ல, பணிவுக்கானது என்றும் கூறினார்.


மேலும் படிக்க | ராமரின் அருளை பெறும் இந்த 4 ராசிக்காரர்கள் விஷ்ணுவை வழிபட்டால் வாழ்க்கை அமோகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ