மனைவியின் காதலை சேர்த்து வைத்த கணவன்! யாரு சாமி நீ? வைரல் செய்தி..

UP Man Got His Wife Married To Her Lover : ஒருவர், தனது மனைவியை கள்ளக்காதலனுக்கே கட்டி வைத்துள்ள சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 28, 2025, 04:26 PM IST
  • திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்ட மனைவி..
  • கணவன் செய்த செயல்..
  • அனைவருக்கும் ஆச்சரியம்-வைரல் செய்தி
மனைவியின் காதலை சேர்த்து வைத்த கணவன்! யாரு சாமி நீ? வைரல் செய்தி..

UP Man Got His Wife Married To Her Lover : கற்பனை கதைகளில் கூட, நம்பும் படியான விஷயங்கள் நடைபெறும் போல. ஆனால், உலகம் போகிற போக்கை பார்த்தால், நமது எண்ணங்களுக்கு அப்பாற்ப்பட்ட பல விஷயங்கள் நிகழுந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெரியரவர்களால் பார்த்து செய்து வைக்கப்பட்ட அரேஞ்ச்ட் மேரேஜ் ஆக இருந்தாலும் சரி, அதனை ஒரு பாரம்பரியமாகவும் கலாச்சாரமாகவும் பார்த்து வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

இந்த திருமண உறவில் இருக்கும் போதே, கணவனோ-மனைவியோ வேறு ஒருவருடன் உறவில் இருந்தால் அதைத்தான் கள்ளக்காதல் என்றோ, திருமணம் மீறிய உறவு என்றோ கூறுகிறோம். இது போன்ற கள்ளக்காதல் விவகாரங்கள் நிகழும் போது, ஒன்று அந்த தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்து விடுவர், அப்படி இல்லையென்றால் யார் அந்த திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டாரோ அவர் தனது தவறை உணர்ந்துவிட்டால் அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வர். ஆனால், இங்கு வித்தியாசமாக ஒரு விஷயம் அரங்கேறியிருக்கிறது.

மனைவிக்கு கள்ளக்காதல்!

உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இங்கிருக்கும் சாந்த் கைபீர் நகர் எனும் மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் பப்லு. இவருக்கு, 2017ஆம் ஆண்டு ராதிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பஹ்டிகளுக்கு 7 மற்றும் 9 வயதில் இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.

ராதிகாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் திருமணம் மீறிய உறவிலும் ராதிகா இருந்துள்ளார். தனது மனைவி, வேறு ஒருவரை காதலிக்கிறார் என்ற விவரம் பப்லுவிற்கு தெரிந்திருக்கிறது. அதன் பிறகு, அவர் தனது ஊராரிடம் இந்த தகவல்களை தெரிவித்திருக்கிறார். தனது திருமணத்தை காப்பாற்ற மனைவி ராதிகாவிடம் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால், எதுவும் பயணளிக்காமல் போகவே, உடனே ஒரு வினோதமான முடிவை எடுத்திருக்கிறார்.

காதலுனுக்கே திருமணம் செய்து வைத்த கணவர்..!

நம் நாட்டில், இது போல கள்ளக்காதல் விவாகரம் நிகழ்கிறது எனும் போது, அதில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றால் அவரை எப்படி தவறாக விமர்சிப்பது என்று பலர் காத்துக்கொண்டிருப்பர். அது மட்டுமல்ல, அந்த பெண்ணின் கணவர் கொடூரமானவராக இருந்தால், அவர் கொலை செய்யக்கூட தயங்கமாட்டார். ஆனால், பப்லு என்ன செய்திருக்கிறார் தெரியுமா? தனது மனைவியின் கள்ளக்காதலுக்கே அவரை திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே மட்டுமல்ல, இதனை கேள்விப்பட்ட அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

முதலில், தனது மனைவியையும், அந்த காதலனையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்று திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். அதன் பிறகு, தனது ஊருக்கு வந்து, அந்த ஊர் மக்களின் முன்னிலையில் கோயிலில் வைத்து இருவரையும் மாலை மாற்ற செய்திருக்கிறார். கூடவே திருமணம் குறித்த சத்திய பிரமாணங்களையும் எடுக்க வைத்திருக்கிறார்.

“குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிறேன்..”

திருமணம் முடிந்த பிறகு, தன் மனைவியை அவரது காதலனுடன் அனுப்பி வைத்த பப்லு, தங்களின் 2 பிள்ளைகளையும் தானே பார்த்துக்கொள்வதாக கூறியிருக்கிறார். இதற்கு அந்த மனைவியும் சம்மதித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பலர், “என்னப்பா இவ்ளோ நல்லவனா இருக்க..?” என்று அந்த கணவனை பார்த்து கேட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | 84 வருட திருமண வாழ்க்கை-100 பேரக்குழந்தைகள்!! சாதனை புரிந்த தம்பதி-வைரல் செய்தி..

மேலும் படிக்க | மருமகளையே திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News