12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்! வினோத செய்தி..

UP Woman Marries 12th Standard Student : 26 வயது பெண் ஒருவர், இரண்டாவது கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஒரு 12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 10, 2025, 01:33 PM IST
  • 12ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த பெண்!
  • 3 குழந்தைகள் இருக்கு..
  • 2வது கணவருக்கு விவாகரத்து..
12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்! வினோத செய்தி..

UP Woman Marries 12th Standard Student : நாட்டில், நாளுக்கு நாள் வினோதமான விஷயங்கள் அரங்கேறி வருகிறது. இவற்றை பார்க்கும் போது, “இப்படியெல்லாம் சினிமாவில் கூட நடக்காதேப்பா..” என்று சாெல்ல தோன்றுகிறது. அதுவும், உத்திர பிரதேசத்தில்தான் கணவனை கொன்று, ட்ரம்மில் போட்டு புதைப்பதும், கணவனே தனது மனைவியை காதலனுக்கு கட்டி வைப்பது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. அந்த வகையில், அதே உத்திர பிரதேசத்தில்தான், தற்போது ஒரு பெண் தனது 2வது கணவரை விவாகரத்து செய்து விட்டு, 12 ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்த பெண்:

உத்திர பிரதேசத்தின் அமோர்ஹா என்ற மாவட்டத்தில் மேற்கூறிய சம்பவம் நடந்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிவானி என்ற அந்த 26 வயது பெண், ஏற்கனவே 2 முறை திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயானவர். 

இவருக்கும், இவர் வசிக்கும் அதே பகுதியில் இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் மீறிய உறவாக உருவெடுத்திருக்கிறது. அது மட்டுமன்றி, ஷிவானி வேறு மதத்தை சேர்ந்தவராகவும், அந்த 12ஆம் வகுப்பு மாணவர் வேறு மதத்தை சேர்ந்தவராகவும் இருந்திருக்கிறார்.

இந்த பெண், 12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தனது 2ஆவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 3 குழந்தைகளையும் அவருடைய பொறுப்பிலேயே விட்டுவிட்டு, அந்த 12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்திருக்கிறார். இவர்களின் திருமணம், அவர்கள் வசிக்கும் இடத்திலேயே இருக்கும் ஒரு கோயிலில் நடந்துள்ளது.

பஞ்சாயத்தில் நடந்தது..

இப்படி ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்ததை ஒட்டி, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஊடகங்களுக்கு சில விஷயங்களை கூறியிருக்கின்றனர். அதன்படி, சில நாட்களுக்கு முன்னர் இந்த பிரச்சனை குறித்து பஞ்சாயத்து கூட்டப்பட்டதாகவும், இதில் இரு தரப்பு குடும்புத்தினரும் ஆஜரானதாகவும் கூறப்படுகிறது. 

இரு தரப்பையும் கேட்ட பஞ்சாயத்தினர், சம்பந்தப்பட்ட பெண் வயது வந்தவர், அவர் அவருடைய இஷ்டப்படி வாழ்வதுதான் சரி என்று தீர்ப்பளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய ஷிவானி, தான் இந்த முடிவை சுயமாக எடுத்ததாகவும், அந்த 12ஆம் வகுப்பு மாணவனும் அதையே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தங்களுக்கு இடையில் வேறு யாரும் வர வேண்டாம் என்றும் கூறி விட்டனர்.

முன்னாள் கணவர்கள்:

ஷிவானி, மதம் மாறுவதற்கு முன்பு அவரது பெயர் ஷப்னம் என்று கூறப்படுகிறது. இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்கு முன்பு 2ஆம் திருமணம் நடந்துள்ளது. ஒரு வருடம் முன்பு, அவரது கணவர் ஒரு சாலை விபத்தில் சிக்கியதால் அவரால் எழுந்து நடமாட முடியாமல் போயுள்ளது. இதையடுத்துதான், அந்த 12ஆம் வகுப்பு மாணவனுடன் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த டீன்-ஏஜ் மாணவரின் தந்தை பேசுகையில், தனது மகனின் எந்த முடிவையும் தான் முழு மனதுடன் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். “அவர்கள் நெடுங்காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் எனது பெரிய ஆசை” என்று அவர் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்த செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | சிரித்து பேசிக்கொண்டே உயிரை விட்ட 20 வயது இளம் பெண்! நெஞ்சை நொறுக்கும் வைரல் வீடியோ..

மேலும் படிக்க | வருங்கால மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்! திருமண நாளில் திடீர் திருப்பம்-வைரல் செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News