Woman Runs Away With Daughter's Father In Law : மகளின் மாமனாருடன் ஓட்டம் பிடித்த தாய் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Woman Runs Away With Daughter's Father In Law : மகளின் மாமனாருடன் ஓட்டம் பிடித்த பெண். படிக்கும் போதே சற்று குழப்பமாக உள்ளதா? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. ஏற்கனவே அங்கு கடந்த வாரம் தான் மாமியாருடன் மருமகன் ஓடிப்போன சம்பவம் நடந்தது.. அதற்கு டப் கொடுக்கும் வகையில் நடந்த மற்றொரு சம்பவம் தான் இது.
உத்தர பிரதேசத்தில், கடந்த சில நாட்களாகவே வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மருமகள் மீது மாமனார் ஆசை கொள்வது, மகளை திருமணம் செய்ய வந்து மாமியாரை கரம் பிடிப்பது, மனைவியை அவரது காதலருக்கு கணவனே திருமணம் செய்து வைப்பது என பல வினோதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது போன்ற சம்பவங்களை பலர் திரைப்படமாக கூட எடுக்க பயப்படுவர். ஆனால், சிலர் தில்லாக இதனை ரியல் வாழ்க்கையிலேயே செய்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் இப்போதும் நிகழ்ந்திருக்கிறது. இதனை பார்த்தவர்கள், மூக்கு மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
மகளின் மாமனாருடன் காதல்..!
உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் குமார். லாரி ஓட்டுநர். இவரது மனைவி மம்தா இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் தனது மூத்த மகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு சைலேந்திரா என்பவரின் மகனுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு மூத்த மகளின் மாமனாரும், சம்பந்தியுமான சைலேந்திராவுடன் மம்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. தனது கணவர் சுனில் குமார் லாரி ஓட்டுநர் என்பதால் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவாராம் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சம்மந்தி சைலேந்திராவை வீட்டுக்கு வரவழைப்பாராம் மம்தா.. பின்னர் பிள்ளைகளை வேறு அறையில் தங்குமாறு கூறிவிட்டு சைலேந்திராவும், மம்தாவும் ஒரே அறையில் நெருக்கமாக இருந்துள்ளனர். இவ்வாறாக கடந்த மூன்று அண்டுகளாக இருவருக்கும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்
நகை பணமும் அபேஸ்!!
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு சம்பந்தியும், மகளின் மாமனாருமான சைலேந்திராவுடன் ஓட்டம் பிடித்துள்ளார் மம்தா. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் மாமனாருடன் அம்மா ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ