CCTV Footage Pastor Bajinder Singh Attacking A Woman : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை பார்த்தாலே நமக்கு தலை சுற்றுகிறது. மிருகங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் கொடுமைகளை பார்த்தாலே கோபத்தில் ஒரு பக்கம் ரத்தம் கொதிக்க, மறு பக்கம் பயத்தில் மனம் பதைப்பதைக்கிறது. பல கொடுமைகளை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு கண்டிப்பாக நாம் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். சிசிடிவி கேமராக்களும், மறைத்து வைத்து வீடியோ எடுக்கப்படும் பென் கேமராக்களும் இல்லை என்றால், நம்மால் பல பயங்கர உண்மைகளை இந்த உலகிற்கு கொண்டே வர இயலாது. அந்த வகையில், ஒரு பாதிரியாரின் கொடூர செயலும் தற்போது சிசிடிவி கேமராவில் பதிவாகி, பார்ப்பவர்களை அதிர்ச்சியுற வைத்துள்ளது.
வைரலாகும் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் இருப்பவர் ஒரு பாஸ்டர் அதாவது அவர் ஒரு மத போதகர். அந்த பாதிரியார், தனக்கென இருக்கும் சேரில் அமர்ந்து கொண்டு, தனக்கு நேரே அமர்ந்து கொண்டு இருக்கும் ஒருவர் மீது எதையோ தூக்கி அடிக்கிறார். அதன் பிறகு அவருக்கு அருகில் வந்து அவரை அடிக்கும் இவர், பின்பு அருகில் இருப்பவரையும் அடிக்கிறார். இதற்கிடையே சோஃபாவில் குழந்தையுடன் ஒருபெண் அமர்ந்து கொண்டிருக்கிறார். அந்த பெண்ணின் மீது பேப்பரை தூக்கி அடிக்கிறார். அந்த பெண் அதன் பிறகு கோபப்பட்டு அவரிடம் எழுந்து நின்று பேசுகிறார்.
CCTV footage of self-styled Christian prophet Baljinder Singh’s office has gone viral, showing him beating his employees, including women. The footage is reportedly from February 2025. Notably, just a few days earlier, the Kapurthala Police had registered an FIR against him under… pic.twitter.com/x2JXF84JAt
— Gagandeep Singh (@Gagan4344) March 23, 2025
அந்த பெண் அருகில் வந்து பேசும் போது, அந்த பாதிரியார் அவரை மீண்டும் தாக்குகிறார். அதன் பிறகு, பலர் வந்து இவரை தடுக்க முயற்சி செய்கின்றனர். இருப்பினும் அவர் பின்வாங்கவில்லை. இந்த வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாவதை தொடர்ந்து, பலர் இந்த பாதிரியாரை கண்டிப்பாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இருக்கும் புகார்..!
இந்த வீடியோவில் நிகழ்ந்துள்ள சம்பவம், பஞ்சாப்பில் நிகழ்ந்துள்ளது. அந்த பாதிரியாரின் பெயர் பல்ஜிந்தர் சிங். 42 வயதாகும் இவருக்கு எதிராக 22 வயது பெண் ஒருவர் ஜலந்தரில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அந்தபெண் 2017ஆம் ஆண்டு முதல் இந்த பாதிரியார் இருக்கும் தேவாலயத்திற்கு தான் தனது பெற்றோருடன் சென்று வருவதாகவும் ஒரு முறை தனது செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு தனக்கு அவர் குறுஞ்செய்திகள் அனுப்ப ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 2022ஆம் ஆண்டு ஒரு முறை அவரது அலுவலகத்தில் தன்னை தனியாக அமர வைத்து கட்டிப்பிடிப்பதும் தவறான இடத்தில் தொடுவதுமாக அவர் நடந்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளார். இது பற்றி யாரிடமாவது கூறினால், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்று விடுவேன் என அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
யார் இந்த பாதிரியார்?
பஞ்சாப் உள்பட பல தேவாலைய கிளைகளை வைத்திருப்பவர், இந்த பஜீந்தர் சிங். தனது சக்தியால் பல தீர்க்க முடியாத நோய்களை தீர்ப்பதாக கூறி, பிரபலமானவர் இவர். சமூக வலைதளங்களில் மிக பிரபலமான ஆளாக சுற்றி வரும் இவர் யூடியூப் சேனலும் வைத்துள்ளார். இவரை ஃபாலோ செய்ய ஒரு கூட்டமே உள்ளது. இந்த நிலையில், இவர் மீது ஒரு பாலியல் வன்புனர்வு வழக்கு மட்டுமல்ல, இன்னும் பல மோசடி வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மாரடைப்பால் உயரிழந்த 8 வயது சிறுமி!! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..
மேலும் படிக்க | ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய நபர்!! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









