லட்டை லபக்கென கவ்விக்கொண்டு ஓடிய குரங்கு! கல்யாண வீட்டில் கலாட்டா-வைரல் வீடியோ

Funny Viral Video Of Monkey Stealing Laddos : ஒரு குரங்கு, கல்யாண வீட்டில் லட்டை கவ்விக்கொண்டு ஓடிய காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Yuvashree | Last Updated : Mar 3, 2025, 01:09 PM IST
  • லட்டை திருடிய குரங்கு..
  • கல்யாண வீட்டில் கலாட்டா..
  • வைரல் வீடியோ..
லட்டை லபக்கென கவ்விக்கொண்டு ஓடிய குரங்கு! கல்யாண வீட்டில் கலாட்டா-வைரல் வீடியோ

Funny Viral Video Of Monkey Stealing Laddos : சமீப சில நாட்களாக இணையத்தில் பல்வேறு வீடியோக்கள் அடிக்கடி வைரலாவதுண்டு. அவை பல சமயங்களில் நகைப்பூட்டும் வகையிலும், சில சமயங்களில் திகைப்பூட்டும் வகையிலும் இருக்கும். இவற்றில் பெரும்பாலானவை, மிருகங்களை வைத்து எடுக்கப்படுவதுண்டு. அதில், கொடூரமாக சிங்கம் வேட்டையாடும் காட்சிகளும் இருக்கலாம். அல்லது ஒரு குட்டி பாண்டா தன்னை பார்த்துக்கொள்பவரிடம் சேட்டை செய்யும் வீடியோவாகவும் இருக்கலாம். அப்படி, ஒரு குட்டிக்குரங்கு செய்த விஷயம்தான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

வைரலாகும் வீடியோ:

மனிதர்கள், குரங்குகளில் இருந்துதான் வந்தார்கள் என்று பலர் சொல்ல கேட்டிருப்பாேம். அவை செய்யும் சில விஷயங்களை பார்க்கும் போது அது உண்மைதான் போல என்று கூட தாேன்றுகிறது. அவை தலை சொறிவது, பேன் பார்ப்பது, பிற குரங்குகளுக்கு ஊட்டி விடுவது போன்ற விஷயங்களை பார்க்கையில் அப்படியே மனிதர்கள் செய்வதை போல இருக்கும்.

தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வட இந்தியர்களின் திருமண விழாக்களில் ஒன்றான ஹல்தி என்ற நலங்கு வைக்கும் சடங்குகள் நடைபெறுகிறது. அப்படி ஒரு சடங்கு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில், அனைவரும் மஞ்சள் நிற உடை அணிந்து காெண்டு விருந்தினர்களாகவும் மணப்பெண்-மணமகனாகவும் அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த கூட்டத்திற்குள் நுழைந்த குரங்கு ஒன்று, லட்டு தட்டுடன் நின்றவரிடம் வந்து, அலேக்காக 2 ஆரஞ்சு லட்டுகளை கவ்விக்கொண்டு கிளம்பி விட்டது.

நெட்டிசன்கள் கலாட்டா:

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பல மில்லியன் வீயூஸ்களையும் லைக்ஸ்களையும் பெற்று வருகிறது. ஒரு சிலர், அந்த குரங்கின் புத்திசாலித்தனமான செயலை பாராட்ட, இன்னும் சிலர் இதில் சிரிப்பு இமோஜிக்களை போட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒருவர், அந்த குரங்கை மீண்டும் அழைத்து நடனமாட சொல்லுங்கள் என்றும், இன்னும் சிலர் அந்த லட்டுக்களில் அந்த குரங்கின் பெயர் எழுதப்பட்டிருப்பதால் அது அவற்றை கவ்விக்கொண்டு சென்று விட்டதாக கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க |கரண்ட் கம்பியில் புல்-அப் செய்த இளைஞர்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | பைக் டேங்கில் அமர்ந்து-கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற பெண்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News