)
Huma Qureshi Brother Murdered : 2018ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம், காலா. இந்த படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்திருந்தவர் ஹூமா குரேஷி. இதில் இடம் பெற்றிருந்த “கண்ணம்மா..கண்ணம்மா” பாடல் இவருக்கென்றே எழுதப்பட்டது போல இருக்கும். இவர், பாலிவுட்டில் பெரிய நடிகையாக இருக்கிறார்.
நடிகையின் சகோதரர் கொலை!
ஹூமா குரேஷியின் உறவினர் முறையில் ஒரு சகோதரர் இருக்கிறார். அவரது பெயர் ஆசிஃப் குரேஷி. இவருக்கு 42 வயதாகிறது. இவர், டெல்லி போகல் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், கீழ் தளத்தில் தங்கி வந்துள்ளார்.
வியாழக்கிழமையான நேற்று, இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்கு வெளியே 2 பேருடன் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
இது குறித்து ஹூமாவின் தந்தை சலீம் குரேஷி ஊடகத்தினரிடம் பேசினார். அப்போது, ஆசிஃப் குரேஷி தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததாகவும், இருவர் வாசலில் வாகனத்தை நிறுத்தியதாக கூறியிருக்கிறார். இதனால் அவர்களுக்கும் ஆசிஃப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்.
இந்த வாக்குவாதத்தை அடுத்து, அந்த இருவரும் ஆசிஃப்பை தாக்கியதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறியிருக்கிறார். இதற்கு காரணமானவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஹஸ்ரத் நிஜாமுதின் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட்டது. ஆசிஃப்பை தாக்கிய ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவர் கைது:
ஆசிஃப்பை கொலை வழக்கில், போலீஸார் சம்பவம் நடந்த போது அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது அதில் கொலையாளிகளின் முகம் தெளிவாக தெரிந்தது. இந்த வழக்கில், இருவரை தற்போது கைது செய்துள்ளனர். இதில், உஜ்வைல் என்ற நபருக்கு 19 வயதும், கௌதம் என்கிற நபருக்கு 18 வயதும் ஆகிறது. இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட ஆசிஃப் இருக்கும் அதே ஏரியாவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஆசிஃப், இறைச்சி சப்ளை செய்யும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு 2 மனைவிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உயிரிழந்த ஆசிஃப் குரேஷியின் மனைவி ஷாஹின், நடந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாக உள்ளார். கொலை நடந்த இரவு 9:30-10 மணி அளவில், பக்கத்து வீட்டுக்காரர் தங்களின் வீட்டிற்கு வெளியிலேயே ஸ்கூட்டரை நிறுத்தியதாகவும், அப்போது தன் கணவர் அதை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், “நான் திரும்பி வருவேன்” என்று மிரட்டிவிட்டு போன அந்த நபர், தன் கணவரை ஷார்ப்பான ஆயுதம் வைத்து தாக்கியதாகவும், உறவினர் ஒருவரை போன் செய்து அழைப்பதற்குள் தன் கணவர் நிறைய ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ