Ambani Antilia House In Legal Trouble Waqf Bill : இந்தியர்கள் அனைவரும் அன்னாந்து பார்க்கும் சொத்து மதிப்பு கொண்ட மிகப்பெரும் பணக்கார குடும்பம், அம்பானியின் குடும்பம். இவர்கள் வீட்டில் சாதாரண ஒரு நிகழ்ச்சி நடந்தால் கூட அதற்காக வெளிநாட்டிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களை கூப்பிடுவர், ஒரு கிராமத்திற்கு உணவளிப்பர். அதையும் தாண்டி இன்னும் பன்மடங்கு பணத்தை செலவழிக்க இவர்களிடம் சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சொந்தமாக இருக்கும் ஆடம்பர வீட்டுக்கு தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.15000 கோடி வீடு:
முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான 15,000 கோடி மதிப்புள்ள ஒரு பெரும் ஆடம்பர வீடு மும்பையில் இருக்கிறது. இதை வீடு என்று சொல்வதை விட ஒரு பெரிய அரண்மனை என்று கூட சொல்லலாம். காரணம் உலகிலேயே மிகவும் பெரிய அரண்மனையான பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்ததாக விலை உயர்ந்த வீடாக இருப்பது இந்த வீடுதான். இந்த வீட்டின் பெயர், ஆன்டிலியா. இந்த வீட்டை 2002 ஆம் ஆண்டு, சுமார் ரூ.21 கோடி மதிப்பில் அம்பானி குடும்பம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த வீட்டில்தான், முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, பிள்ளைகள் ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி உள்ளிடோர் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்த வீடு மும்பையில் இருக்கும் கும்பலா மலையில் இருக்கும் ஒரு ஆடம்பர சாலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் 27 மாடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனி தியேட்டர், ஸ்பா, ஸ்னோ ரூம், ஒரு கோவில், தொங்கும் தோட்டம், ஜிம், நீச்சல் குளங்கள் என பல்வேறு அம்சங்கள் இந்த வீட்டில் இருக்கின்றன.
வீட்டுக்கு வந்த வேட்டு:
முகேஷ் அப்மானியின் வீடு இருக்கும் இந்த நிலமானது, கோஜா என்ற சமூகத்தை சேர்ந்த, ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்விக்காக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை, கரீம் போய் இப்ராஹிம் என்பவர் வக்பு வாரியத்திற்கு தானாக வந்து வழங்கியதாக கூறப்படுகிறது.
இதன்படி, ஒரு நிலம் வக்புக்கு கொடுக்கப்பட்டால் அது ஆதரவர்கள் வீடு கட்டிக்கொள்ளவும், ஆன்மிக பள்ளி தொடங்கவும்தான் எடுத்துக்கொள்ளப்படும். இதையடுத்து, கரிம்போய் கோஜோ அறக்கட்டளை, ஏப்ரல் 2002ல் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சுமார் ரூ.21 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. அந்த நாள் முதல், இது அம்பானிக்கு சொந்தமான நிலமாக மாறிவிட்டது. தற்போது, இந்த நிலத்தில்தான் அம்பானியின் வீடானது அமைக்கப்பட்டிருக்கிறது.
காலி செய்யும் நிலை?
இதற்கு முன்னரே இது தொடர்பான அறிக்கை ஒன்று மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வக்பு வாரியத்திற்கு தானமாக வழங்கப்பட்ட சொத்தை தனியாருக்கு விற்க சட்டத்தில் இடம் இல்லை என கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தின் விற்பனைக்கு சட்டப்பூர்வமான அனுமதி இருப்பது இப்போது சந்தேகத்தில் உள்ளது.
இந்த பிரச்சனையில், சம்பந்தப்பட்ட அறக்கட்டளையும், வக்பு வாரியமும் இணைந்துதான் தீர்வு காண வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது.
கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வக்பு வாரிய சீர்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேற்கூரிய வீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதை அடுத்து, தீர்ப்பு அம்பானி குடும்பத்துக்கு எதிராக வந்துவிட்டால், கண்டிப்பாக அவர்கள் வீட்டை காலி செய்யும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அம்பானி வீட்டு திருமணத்தை மிஞ்சும் அதானி வீட்டு கல்யாணம்!! இத்தனை ஏற்பாடுகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









