திருமண நிச்சயம் முடிந்த 10 நாளில்..இராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

Pilot Killed In Jaguar Crash : ராணுவ வீரர் ஒருவர், மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுயிர் நீத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 5, 2025, 04:15 PM IST
  • நிச்சயம் முடிந்த நிலையில் ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..
  • விபத்தில் உயிரிழந்தார்..
  • கதறியழுத காதலி..
திருமண நிச்சயம் முடிந்த 10 நாளில்..இராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

Pilot Killed In Jaguar Crash : நாட்டிற்காக உயிர் துறக்கும் பல இராணுவ வீரர்களின் கதைகளை கேட்டிருப்பாேம். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அமரன் திரைப்படத்தின் கதை, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுடையதுதான். இது பாேல, தற்போது ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்திருப்பது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

ராணுவ விமானி உயிரிழப்பு:

ஹரியனாவை சேர்ந்த ராணுவ விமானி சித்தார்த் யாதவ். இவர், 2017ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்ந்திருக்கிறார். இவரது குடும்பத்தில் இவர் நான்காவது தலைமுறையை சேர்ந்த ராணுவ வீரர் ஆவார். இதற்கு முன்னர் இவரது தாத்தா, தந்தை என பலர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். சித்தார்த், விமான லெப்டினன்ட்-ஆக பொறுப்பில் இருந்தார். 

கடந்த மார்ச் 2ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் ஜாம்நகர் விமான தளத்தில் இருந்து, சுவர்தா என்ற கிராமத்தை நோக்கி, சித்தார்த்தும் அவருடன் இன்னொரு விமானியும் ஜாக்குவார் போர் விமானத்தை இயக்கியிருக்கின்றனர். இது, எப்போதும் இரவில் நடக்கும் வழக்கமான பயிற்சியாகும். விமானத்தை இயக்கிய போது, அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. 

உடனே சுதாரித்துக்கொண்ட சித்தார்த், விமானத்தில் தன்னுடன் இருந்த இன்னொரு ராணுவ வீரரை பத்திரமாக வெளியேற்றிவிட்டு, விமானத்தை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு திருப்பியிருக்கிறார். இதனால், பல பொதுமக்களின் உயிர் காப்பாற்றப்படிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். இன்னொரு விமானிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இப்போது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

10 நாட்களுக்கு முன்பு நடந்த நிச்சயதார்த்தம்:

விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ விமானி சித்தார்த்திற்கு 10 நாட்களுக்கு முன்புதான் திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. கடந்த மார்ச் 23ஆம் தேதி சானியா என்ற பெண்ணுடன் இவருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இருவரும், இன்னும் ஒரு சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். அதற்குள், இப்படி ஒரு கோர சம்பவம் ஏற்படும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். மேலும், தன் மகனை நினைத்து பெருமை கொள்வதாகவும், அவனால் பல உயிர்கள் போவது தடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இவரது பிற உறவினர்களும் ராணுவத்தில் இருக்கின்றனராம். 

மனமுடைந்த வருங்கால மனைவி..

உயிரிழந்த சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ள இருந்த சானியா, அவரது இறுதி சடங்களில் மனமுடைந்து அழுத காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “நீ என்னை திரும்ப வந்து கூட்டிட்டு போரேன்னு சொன்னியே..ஏன் வரல..” என்று அவர் கூறி அழுவது காண்போரை கண்கலங்க வைக்கிறது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அனைவரும் சித்தார்த்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மனைவியுடன் நடனமாடிக்கொண்டே உயிரை விட்ட கணவன்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | மனைவியை கொன்றதாக 1.5 வருடங்கள் சிறையில் இருந்த கணவன்! உயிருடன் வந்த மனைவி..வைரல் செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News