மனைவியை கொன்றதாக 1.5 வருடங்கள் சிறையில் இருந்த கணவன்! உயிருடன் வந்த மனைவி..வைரல் செய்தி

Karnataka Man In Jail For Murdering His Wife : கர்நாடகாவில் நடந்திருக்கும் ஒரு சம்பவம், தற்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 5, 2025, 01:00 PM IST
  • மனைவியை கொன்றதாக கைது செய்யப்பட்ட கணவன்!
  • 1.5 வருடங்கள் சிறையில் இருந்தார்..
  • உயிருடன் திரும்பி வந்த மனைவி..
மனைவியை கொன்றதாக 1.5 வருடங்கள் சிறையில் இருந்த கணவன்! உயிருடன் வந்த மனைவி..வைரல் செய்தி

Karnataka Man In Jail For Murdering His Wife : சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒவ்வொரு செய்திகளும், விநோதமாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றன. அப்படி, சமீபத்தில் ஐதராபாத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Zee News as a Preferred Source

மனைவியின் கொலை வழக்கு:

இந்த சம்பவம், ஐதராபாத்தில் நடந்திருக்கிறது. இதில், மனைவியை கொலை செய்ததாக 38 வயது சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவமானது 2024ல்  நடந்துள்ளது. இவரது மனைவி மல்லிகை, கொடகு என்ற மாவட்டத்தில் இருந்து குஷல் நகர் எனும் இடத்தில் இருந்து காணாமல் போயிருக்கிறார். இதையடுத்து, ஒரு பெண்ணின் எலும்புகூண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது, மல்லிகையின் எலும்புகூண்டுதான் என யூகித்த போலீஸார், அவருடைய கணவன்தான் அவரை கொலை செய்ததாக கூறி கைது செய்தனர். இதையடுத்து, சுரேஷ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் சிறையில் வாசம் செய்திருக்கிறார்.

உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டவர்:

சுரேஷின் நண்பர், மல்லிகையை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வேறுஒரு நபருடன் மதிகேரி என்ற இடத்தில் பார்த்திருக்கிறார். இதையடுத்து, தனது நண்பருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றமும், சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருக்கிறது. 

இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், வரும் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்த முழு விவரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. சுரேஷின் வழக்கறிஞர் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தனது மனைவி 2020ல் காணாமல் போன மனைவி குறித்து புகார் கொடுத்ததாகவும், எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டவுடன் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் முன்னரே அவர் மீது சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். டிஎன்ஏ பரிசோதனை மிஸ்மேட்ச் ஆன பின்புதான் அவருக்கு பெயில் கிடைத்திருக்கிறது. இது குறித்து போலீஸார் சரியாக விசாரணை நடத்ததால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | மனைவியுடன் நடனமாடிக்கொண்டே உயிரை விட்ட கணவன்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | மருமகளையே திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News