Kerala Ex CM Achuthanandan Passes Away : கேரளாவின் முன்னாள் முதலமைச்சராகவும், கம்யூனிச தலைவரகாவும் இருந்தவர், வி.எஸ்.அச்சுதானந்தன். இவர், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, தனது 102வது வயதில், ஜூலை 21ஆம் தேதியான இன்று உயிரிழந்துள்ளார்.
கேரளாவின் முன்னாள் முதல்வர்:
கேரளாவின் அரசியல் வரலாற்றில் பெரும்பங்காற்றியவர் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். 44 வயதில் எம்.எல்.ஏ ஆன இவர், 2006ஆம் ஆண்டு, தனது 82வது வயதில் முதன்முறையாக கேரளாவின் முதலமைச்சர் ஆனார். இதையடுத்து, எதிர்கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து 3 முறை பதவி வகுத்தார். 2018ஆம் ஆண்டு வரை, அரசியலில் ஆக்டிவாக இருந்த இவர், உடல் நிலை பிரச்சனை காரணமாக ஓய்வு எடுத்து வந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் வயது மூப்பு மற்றும், உடல் நலக்குறைவு காரணமாக இவரை இந்த மாதத்தின் தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். ஆனால், எவ்வளவு சிகிச்சை அளித்தும் இவரது உடல் நிலையில் மாற்றம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இவருக்கு, பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் இதற்கு அவர் உடல் ஒத்துழைக்கவில்லை. காலை முதல், இவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, அவர் சில மணி நேரங்களுக்கு முன் உயிரிழந்தார்.
யார் இந்த அச்சுதானந்தன்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (சிபிஐ) பிரிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான முதல் குழுவில் உயிருடன் இருந்த கடைசி உறுப்பினர் அச்சுதானந்தன். இவர், ஆலப்புழாவில் உள்ள புன்னப்பிரா எனும் இடஹ்ட்தில் பிறந்தார். தனக்கு 18 வயது ஆகும் முன்பே சுதந்திர போராட்ட வீரர் வி.கே.கருணாகரனின் பேச்சால் ஈர்க்கப்பட்ட இவர், தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார். தனக்கு 23 வயதாக இருந்த போது, 1946ஆம் ஆண்டில் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இயகத்தில் கலந்து கொண்டார். இதில் போலீசார் நடத்திய தடியடியில், அதிகமாக பாதிக்கப்பட்ட நபர்களுள் இவரும் ஒருவர். இவர் இறந்து விட்டதாக பலர் நினைத்த சமயத்தில், மீண்டும் உயிருடன் வந்து போராட்டங்களில் ஈடுபட்டார்.
1964ஆம் ஆண்டில், CPI கட்சி பிளவுப்பட்டு CPI (M) உருவாகிய போது, அக்கட்சியில் இருந்து விலகிய 32 தலைவர்களுள், அச்சுதாநந்தனும் ஒருவர். இதற்கு மூன்று வருடம் கழித்து நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இவர், அவருடன் போராட்டக்களத்தில் நின்ற கே.வசுமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அச்சுதானந்தன் முதலமைச்சரகா இருந்த போது கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. இவரது நேர்பட பேசும் குணம், பலரால் பாராட்டப்பட்டதை தாண்டி, பலமுறை இவரை சர்ச்சையில் ஆழ்த்தியிருக்கிறது.
தலைவர்கள் இரங்கல்:
வி.எஸ்.அச்சுதானந்தன் மறைந்துள்ளதை அடுத்து, அவருக்கு இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | இதில் மட்டும் மௌனம் காக்கும் மத்திய அரசு... நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









