Kerala Teacher Accused Of Fake Physical Harassment : பெண்களுக்கு எதிரான வன்முறை அல்லது வன்புணர்வு குறித்த குற்றச்சாட்டுகள், இந்தியாவில் பெரும் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகின்றன. இதனால் பல பெண்களுக்கு நியாயம் வழங்கப்பட்டாலும், ஒரு சிலர் அதனைத் தவறாக பயன்படுத்திக் கொண்டு, சிலரின் வாழ்க்கையை சீரழிக்க முயற்சி செய்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தற்போது கேரளாவில் நிகழ்ந்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
ஆசிரியர் மீது பாலியல் புகார்..!
கேரள மாநிலம், கோட்டையம் அருகில் இருக்கும் மதுரவேலி புதிய சேர்ந்தவர் ஜோமோன். ஆசிரியரான இவர், 2017 ஆம் ஆண்டு குரு பந்தரை என்ற இடத்தில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். அங்கு கொச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் பயின்று வந்திருக்கிறார். வகுப்புகள் சரியாக நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு நாள் தனக்கு ஆசிரியர் ஜோமோன் பாலியல் தொல்லை அளிப்பதாக அந்த மாணவி போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணையின் போது ஒரு முறை ஜோமோன் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் ஜாமினில் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
ஏழு வருட போராட்டம்..
பாலியல் குற்றவாளிகளை, யாரும் நன்றாக நடத்த மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஜோமோனின் வாழ்க்கையும் அப்படி ஒரு திருப்பத்தை தான் சந்தித்து இருக்கிறது. இவரை இவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் புறக்கணித்திருக்கின்றனர். தனது வருமானத்தையும் இழந்திருக்கிறார். இதனால், அவரது குடும்பமே ஏழ்மை நிலையில் வாடி இருக்கிறது. கிடைத்த வேலையை செய்து குடும்பத்தை ஓட்டி வந்திருக்கிறார் ஜோமோன். கடந்த ஏழு ஆண்டுகளாக இதுவே அவரது வாழ்க்கையாக இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் உச்சத்திற்கு சென்ற அவர் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்ள கூட முடிவு செய்ததாக கூறியிருக்கிறார்.
தவறை ஒப்புக்கொண்ட மாணவி!
ஜோமோன் படும் கஷ்டங்களை கேள்விப்பட்ட அந்த மாணவி, அவரைப் பார்ப்பதற்காக தனது கணவருடன் வந்திருக்கிறார். இதையடுத்து, ஜோமோனின் குடும்ப தேவாலயம் ஒன்றில், அனைவரும் முன்னிலையிலும் ஆசிரியர் ஜோமோனிடமும் அவரது குடும்பத்தாரிடமும் அந்த மாணவி மன்னிப்பு கேட்டிருக்கிறார். சிலரின் தூண்டுதலின் பெயரில் தான் இப்படி ஒரு பொய் புகார் தெரிவித்ததாக அனைவரும் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டார். பின்பு, ஆசிரியர் ஜோமோன் ஒரு நிலவரதி தான் என்று கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்.
இந்த விஷயம் நீதிமன்றம் வரை செல்ல, என் மனைவி நீதிபதி முன்பு ஆஜராகி நடந்த தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அத்துடன், தனது புகாரையும் வாபஸ் பெறுவதாக கூறியிருக்கிறார். இதனால் ஜோமோனை அந்த நீதிமன்றம் அவரது வழக்கிலிருந்து விடுவித்து இருக்கிறது. இதனால் தனக்கு நிம்மதியாக இருப்பதாகவும் இப்போதுதான் நிம்மதி பெரும் மூச்சு விடுவதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் ஜோமோன் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து கேரளா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பேசி வருகிறது.
மேலும் படிக்க | காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் யூடியூபர்! வெளியான சிசிடிவி காட்சிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ