இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்! மோடிக்கு வைத்த வேண்டுகோள்..வைரல் வீடியாே..

Pakistan Woman Married Indian Request To PM Modi : இந்தியா-பாகிஸ்தான் இடையே இணக்கமான சூழல் நிலவாத நிலையில், இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தானை சேர்ந்த பெண் வைத்துள்ள வேண்டுகோள் குறித்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 28, 2025, 12:53 PM IST
  • இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்!
  • மோடிக்கு வைத்த வேண்டுகோள்..
  • வைரலாகும் வீடியோ..
இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்! மோடிக்கு வைத்த வேண்டுகோள்..வைரல் வீடியாே..

Pakistan Woman Married Indian Request To PM Modi : ஏப்ரல் 22ஆம் தேதி, நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல் நடைப்பெற்றது. இதில், 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களை கொன்றது, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று இந்தியா சந்தேகிக்கிறது. இதனால், அவசரநிலையாக இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு விரைவில் வெளியேற வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது மட்டுமன்றி, இந்தியாவில் இருப்பவர்களை தாண்டி, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் பாகிஸ்தானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

Add Zee News as a Preferred Source

இந்தியா-பாகிஸ்தானின் இந்த பிரச்சனை இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களையும் பாதித்து வருகிறது. ஒரு சிலர், இரு நாட்டுக்கும் இடையே போர் வேண்டுமென சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வுடன் பதிவிட்ட கமெண்ட்களையும் பார்க்க முடிந்தது.

இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் பெண்!

“கடல் கடந்தும் காதல் வரும்-கண்டவுடனும் காதல் வரும்” என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். இந்த காதல், எதிரி நாட்டுக்காரர் என்பதை பார்க்காமலும் வரும். அப்படி, இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்ஸாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சோயப் மாலிக்கை காதல் திருமணம் செய்து கொண்டு, அந்நாட்டின் மருமகளாகியிருக்கிறார் (இப்போது அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது). இப்போது, அதே போல இந்தியரை கரம் பிடித்த ஒரு பாகிஸ்தானின் பெண்ணும் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த பெண், பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தின் ஐகோபாபாத் எனும் நகரை சேர்ந்தவர். இவரது பெயர், சீமா ஹைதர். இந்த 32 வயது பெண்ணுக்கும், இந்தியாவின் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சச்சின் மீனா என்ற 25 வயது இளைஞருக்கும் பப்ஜி விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியிருக்கிறது.

இந்தியாவில் குடியேற்றம்..

சீமா ஹைதருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் சச்சினை பார்ப்பதர்காக தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு 2023ஆம் ஆண்டு, நேபாளத்திற்கு வந்திருக்கிறார். சச்சினும் அங்கு வந்து அவரை திருமணம் செய்து கொண்டு, சட்டவிரோதமாக நேபாளம் வழியாக அவரை இந்தியா கூட்டி வந்திருக்கிறார்.

சச்சின், சீமா மற்றும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார். இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர், பின்பு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த பிரச்சனைகளை அடுத்து, சீமா தனது கணவருடன் மகிழ்ச்சியாக வசித்து வந்திருக்கிறார். சீமா, திருமணத்திற்கு பிறகு இந்து மதத்திற்கு மாறி விட்டதாக பேசப்படுகிறது. சீமா-சச்சின் தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மருமகள்..

பஹல்காம் தாக்குதைன் எதிரொலியாக, பாகிஸ்தானியர்களின் விசா சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்களை விரைவில் வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது. இதையடுத்து, சீமா ஹைதர் தன்னை இந்தியாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தனது நிலையை விளக்கி அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.

அதில், தான் பாகிஸ்தானின் மகளாக இருந்ததாகவும் இப்போது இந்தியாவின் மருமகளாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தனக்கு பாகிஸ்தானுக்கு செல்வதில் விருப்பமில்லை என்று கூறியிருக்கும் அவர், தன்னை இங்கேயே இருக்க அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும், உ.பி முதலமைசர் யோகி ஆதித்யநாத்துக்கும் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து ஒரு பிரபல வழக்கறிஞர் பேசுகையில், சீமா இந்தியரை மணந்ததால் அவர் இப்போது இந்தியர்தான் என்றும், அவர் இந்தியாவில் இருக்க உரிமை  இருப்பதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் - மோடி எச்சரிக்கை!

மேலும் படிக்க | தாலிகட்ட தயாராக இருந்த மாப்பிள்ளை! ‘இதை’ கேட்டவுடன் திடீரென நின்ற திருமணம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News