Reason Why Mukesh Ambani House Does Not Have AC : இந்தியாவின் டாப் தொழிலதிபர்களுள் ஒருவர், முகேஷ் அம்பானி. இவரது ஆடம்பர வீடான ஆண்டிலியா, மும்பையில் உள்ளது. இந்த வீட்டிற்கு ஏசி-யே இல்லை என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மட்டுமல்ல, உலகளவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருப்பவர், முகேஷ் அம்பானி. இந்த அம்பானி குடும்பத்துக்கு, ஒன்றல்ல இரண்டல்ல, இவருக்கு எண்ணிலடங்கா தொழில்கள் இருக்கின்றன. இவர் மட்டுமல்ல, இவரது பிள்ளைகள், மனைவி நீடா அம்பானி என அனைவருமே பெரும் தொழிலதிபர்களாக இருக்கின்றனர். இவர்கள், மும்பையில் ஒரு பெரிய மாளிகையில் தங்கயிருக்கின்றனர். இந்த வீட்டிற்கு ஏசி இல்லை என்று கூறப்படுகிறது.
15000 கோடி வீடு..
அம்பானி, தனது குடும்பத்தாருடன் மும்பையில் இருக்கும் கும்பலா மலையில் இருக்கும் அல்டமவுட்ன் சாலையில் இருக்கும் ஆண்டிலியா எனும் வீட்டில் தங்கியிருக்கிறார். இது, பக்கிங்காம் அரண்மனைக்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய வீடாக பார்க்கப்படுகிறது. இந்த வீட்டின் பெயர் ஆன்டிலியா.
உலகத்தரம் வாய்ந்த இந்த ஆன்டிலியா வீட்டில் மொத்தம் 27 கட்டடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதில் விரிவாக அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடங்கள், தனியார் தோட்டம், மொட்டை மாடி தோட்டம், பல தரப்பட்ட நீச்சல் குளங்கள், கோயில் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த வீட்டில் நிறைந்திருக்கின்றன. இந்த வீட்டின் மொத்த மதிப்பு மட்டும் தற்போது ரூ.15000 கோடி என்று கூறப்படுகிறது.
ஏசி இல்லையா?
முகேஷ் அம்பானியின் வீடு குறித்த தகவல்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீட்டில் ஏசி இல்லை என்று கூறப்படுகிறது. எப்போதும், அனைத்து வீடுகளுக்கு போடப்படும் ஏர் கண்டீஷனிங் இல்லையாம். காரணம், இந்த ஏசி மாட்டினால் வீட்டின் வெளிபுற அழகு கெட்டுவிடுகாம். அதனால், வீட்டின் மையத்தில் அதாவது central air conditioning இருக்குமாம். இந்த ஏசி இருப்பதால், வீட்டின் வெப்பநிலைக்கு ஏற்ப இந்த ஏசியின் குளிர்ச்சி மாறுபடுமாம்.
இந்த வீட்டில் ஏசி இல்லை என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, நடிகை ஸ்ரேயா தன்வந்திரி இது குறித்து பேசியிருக்கிறார். இவர், ஒரு முறை இந்த வீட்டிற்கு ஷூட்டிங்கிற்காக சென்ற போது இதில் செண்ட்ரல் ஏர் கண்டீஷனிங் இருப்பதை பார்த்ததாகவும் அதனால்தான் இந்த வீடு குளிர்ச்சியாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஏன் இப்படி?
இந்த ஆன்டிலியா வீட்டில், பளிங்கு மற்றும் சில பூக்கள் இருக்கிறதாம். இவற்றை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டுமாம். இதனால், இதற்காகவும் ஏசி இப்படி வடிவமைக்கப்பட்டதாக ஸ்ரேயா தெரிவித்திருக்கிறார். இதில் இன்னொரு ஆச்சரியமளிக்க வைக்கும் உண்மை என்னவென்றால், இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையும் சரியாக 300 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார். மொத்தமாக இந்த வீட்டிற்கு சராசரியாக 6,37,240 யூனிட் மின்சாரம் ஆவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரூ.15000 கோடி வீட்டை காலி செய்யும் ஆனந்த் அம்பானி? கடைசியில் இப்படியொரு நிலையா!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









