வருங்கால மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்! திருமண நாளில் திடீர் திருப்பம்-வைரல் செய்தி..

Son In Law Elopes With Mother In Law : உற்றார் உறவினர்களுடன் பெண்பார்த்து திருமணத்திற்கு நாள்குறிக்கப்பட்ட நிலையில், மாமியாருடன் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...  

Written by - Yuvashree | Last Updated : Apr 9, 2025, 01:35 PM IST
  • மாமியாருடன் ஓட்டம் பிடித்த மணமகன்..
  • திருமணம் ஆக வேண்டிய நேரத்தில் ட்விஸ்ட்..
  • வைரல் செய்தி..
வருங்கால மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்! திருமண நாளில் திடீர் திருப்பம்-வைரல் செய்தி..

Son In Law Elopes With Mother In Law : திருமண நாளில் பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ தனது காதலருடன் ஓட்டம் பிடிக்கும் சம்பவம் அவ்வப்போது அறங்கேறி வரும். இதுபோன்ற சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது. காதலருடன் அல்ல யாருடன் என்பது வியப்பான செய்தி.

Add Zee News as a Preferred Source

உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேடி வந்துள்ளார். நீண்டகாலத் தேடுதலுக்குப் பிறகு தனது மகளுக்கு நல்ல வரன் ஒன்று அமைந்துள்ளது. இருவீட்டாரும் சாதகம் பார்த்து திருமணம் செய்வதற்கு முடிவு செய்தனர். இருவருக்கும் சாதகம் பொருந்தி வரவே, நள்ள நாள் பார்த்து திருமணத்திற்கும் தேதி குறித்தனர். அதன்படி வரும் 16ம் தேதி திருமணம் நடைபெறுவதாய் இருந்தது. இதனைத் தொடர்ந்து, திருமண அழைப்பிதழ்கள் நல்ல டிசைன்களில் அச்சடிக்கப்பட்டு உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மணமகன், தான் மணக்கப் போகும் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மணமகளின் தாய்க்கும் மாப்பிள்ளைக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. மணமகளை விட அவரது தாய் பாப்பிள்ளையின் கண்ணுக்கு அழகாய் தெரிந்துள்ளது. 

மாமியாரின் அழகில் மயங்கி..

மாமியாரின் அழகில் மயங்கிய மாப்பிள்ளை தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் பரிசாக வழங்கியுள்ளார். மருமகன் - மாமியார் இருவரும் செல்போனில் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி வந்த நிலையில், அவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. 

மணப்பெண்ணின் தாய் வருங்கால மருமகனுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாக மருமகனுடன் பேசி வருவதாக அந்த மாமியார் வீட்டில் உள்ளவர்களின் வாயை அடைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரின் காதலும், மிகவும் நெருக்கமானதால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 

மருமகனுடன் ஓட்டம்..

மகளின் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில், மாமியார் தனது மகளை திருமணம் செய்யவிருந்த மருமகனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். அப்படி போகும்போது, தனது மகளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகள், பணத்தையும் எடுத்து சென்றுள்ளார். 

இதனிடையே மணப்பெண்ணின் தாயார் மாயமானதால், சந்தேகம் அடைந்த மணப்பெண்ணின் குடும்பத்தினர் பீரோவை திறந்து பார்த்துள்ளனர். அதிலிருந்த நகை, பணம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். மணமகனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும் வீட்டில் இல்லாதது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இருவரையும் தொடர்புகொள்ள முயற்சித்தபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. 

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரை பதிவு செய்த போலீசார், காணாமல் போன இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மகளை திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளையுடன் மாமியார் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மனைவியை கொன்றதாக 1.5 வருடங்கள் சிறையில் இருந்த கணவன்! உயிருடன் வந்த மனைவி..வைரல் செய்தி

மேலும் படிக்க | மருமகளையே திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News