கார் டிக்கியில் தொங்கிய கை! அச்சமூட்டும் வைரல் வீடியோ..

Video Of Hand Dangling Car Backside : சமீபத்தில், காரில் கை தொங்கிக்கொண்டு இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து, இது குறித்த உண்மை விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 16, 2025, 05:44 PM IST
  • காரில் தொங்கிய கை..
  • வைரலாகும் அதிர்ச்சியூட்டும் விடியோ..
  • கடைசியில் நடந்த ட்விஸ்ட்
கார் டிக்கியில் தொங்கிய கை! அச்சமூட்டும் வைரல் வீடியோ..

Video Of Hand Dangling Car Backside : இணையத்தின் வைரலாகி வரும் வீடியோக்கள் பல, பல சமயங்களில் நம் அடிவயிற்றை கலக்கும் அளவிற்கு பயத்தை ஏற்படுத்துகின்றன. இது போன்ற வீடியோக்கள் பல சமயங்களில் வெறும் நகைச்சுவைக்காக நிகழ்த்தப்பட்டதாகவும், பிரான்ங்க்  செய்யும் வகையில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. சில சமயங்களில் சீரியஸாக போய் முடியலாம். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

வைரலாகும் வீடியோ: 

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒரு வீடியோ இன்ஸ்டாகிராம், facebook, whatsapp, X உன்கிட்ட அனைத்து தலங்களிலும் வைரல் ஆனது. அதில் கார், அதன் பின்பகுதியில் இருக்கும் லகேஷ் வைக்கும் இடத்தில், ஒரு கை வெளியில் துங்கப்பட்டவாறு சென்று கொண்டிருந்தது. இந்த வீடியோ மும்பையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படி கை தொங்குவதை பார்த்த பிற வாகன ஓட்டிகள், சம்பந்தப்பட்ட அந்த காரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர். கூடவே மும்பை காவல்துறையினரையும் டேக்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ கடந்த திங்கட்கிழமை மாலை 6:45 மணி அளவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

போலீசார் விசாரணை: 

அந்த வீடியோவை மொட்டையாக பார்க்கும்போது, யாரோ ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை வெளியே தொங்குவது போல இருந்தது. இதனால் அதிர்ச்சி விட்ட காவல் அதிகாரிகள், அது ஒரு வேலை கடத்தலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். வீடியோவில், அந்த காரின் நம்பர் பிளேட் தெரிந்தது. இதை எடுத்து அதை டிராக் செய்து விலாசத்தை கண்டுபிடித்து விசாரணையை நடத்தினர். இந்த கார் கடகோபர் இன்னும் இடத்தை சேர்ந்த கார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

கடைசியில் அதிர்ச்சி..

காரின் விலாசத்தை கண்டுபிடித்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் எங்கு சென்றனர். ஆனால் இறுதியில் அவர்கள் கையில் கிடைத்தது மூன்று பொடியன்கள்தான். இவர்கள் ஒரு மடிக்கணினி விற்கும் கடைக்காக ஒரு விளம்பர வீடியோ எடுக்கும்போது இதனை செய்ததாக கூறப்படுகிறது. இது போன்ற ஒரு விஷயத்தை செய்து அவர்கள், மக்களின் கவனத்தை ஈர்க்க நினைத்திருக்கின்றனர். கடைசியில் மடிக்கணினியை விற்க நினைத்த அவர்கள் போலீஸிடம் மாட்டிக் கொண்டது தற்போது வேடிக்கையான நிகழ்வாக மாறி இருக்கிறது. இதையடுத்து, போலீஸார் அவர்களுக்கு அறிவுரை கூறி இனி இப்படி செய்ய கூடாது என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

நெட்டிசன்கள் ரியாக்ஷன்..

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் பலர், தங்களின் கருத்துகளை வெளியிட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு சிலர், இன்றைய தலைமுறையினர், கையில் போன் கிடைத்தவுடன் ஆடாத ஆட்டம் ஆடுவதாக பதிவிட்டிருக்கின்றனர். இன்னும் சிலர், நாம் சமூக பொறுப்புடன்  செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் படிக்க | கணவனை ரோட்டில் இழுத்து போட்டு அடித்த மனைவி..Why this கொலவெறி? வைரல் வீடியோ..

மேலும் படிக்க | Viral Video: சூட்கேஸ் உள்ளே இளம்பெண்... ஹாஸ்டலுக்கு கொண்டசெல்ல முயன்ற மாணவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News