பீகார் தேர்தல் கடந்து வந்த பாதை: NDA மற்றும் மகா கூட்டணியில் தொடரும் தொகுதி பங்கீடு குழப்பம்

Bihar Election Seat Sharing: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இடப் பங்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணி ஆகிய இரு கட்சிகளுக்குள்ளும் மோதல் தொடர்கிறது. சிறிய கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைக் கோருவதால், பெரிய கட்சிகள் இறுதி ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாகி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 10, 2025, 05:36 PM IST
பீகார் தேர்தல் கடந்து வந்த பாதை: NDA மற்றும் மகா கூட்டணியில் தொடரும் தொகுதி பங்கீடு குழப்பம்

Latest News In Bihar Election: பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணிகள் மற்றும் இடப்பங்கீடு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இருப்பினும், என்டிஏ (NDA) அல்லது  மகா கூட்டணி (Grand Alliance) இருந்தாலும், இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையே இருக்கை பங்கீடு குறித்து இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இன்று (வெள்ளிக்கிழமை) NDA கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இடையே இருக்கை பங்கீடு குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் LJP (RV) தலைவர் சிராக் பாஸ்வானின் இல்லத்திற்குச் சென்றார். இதற்கிடையில், JDU-BJP தலைவர்களும் பாட்னாவில் ஒரு கூட்டத்தை நடத்தினர். RJD தலைவர்கள் பாட்னாவில் உள்ள லாலு யாதவின் இல்லத்திலும் கூடி இருக்கை பங்கீடு குறித்து விவாதித்தனர்.

Add Zee News as a Preferred Source

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் எப்பொழுது?

பீகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது பீகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த வந்த பாதை மற்றும் முந்தைய தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் போட்டியிட்டன என்பதைப் பார்ப்போம். 

பீகார் மாநிலத்தில் எத்தனை சட்டமன்ற இடங்கள் உள்ளன?

பீகாரில் 243 சட்டமன்ற இடங்கள் உள்ளன. மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை அடைய எந்தவொரு கட்சியோ அல்லது கூட்டணியோ குறைந்தது 122 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த தேர்தலில், NDA கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான மகா கூட்டணி 110 இடங்களை வென்றது. 

பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் 2020 ஒரு பார்வை:

2020 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணியைப் பொறுத்தவரை ஜேடியூ (JDU), பிஜேபி (BJP), முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி (11), மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) 7 ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. மறுபுறம் எதிர்கட்சிகளின் கூட்டணியான மகா கூட்டணியில் ஆர்ஜேடி (RJD) 144 இடங்களிலும், காங்கிரஸ் (Congress) 70, இடங்களும், சிபிஐ (CPI) 6 இடங்களிலும், சிபிஐஎம் (CPI-M) 4 இடங்களிலும்  போட்டியிட்டது. அதபோல அந்தத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 134 இடங்களில் போட்டியிட்டது.

NDA கூட்டணி போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை

- ஜனதா தளம் (ஐக்கிய): 115
- பாரதிய ஜனதா கட்சி: 110
- விகாஷீல் இன்சான் கட்சி: 11
- இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா: 7

மகா கூட்டணி போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை

- ராஷ்ட்ரிய ஜனதா தளம்: ​​144
- காங்கிரஸ்: 70
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை): 19
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: 6
- இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): 4

பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் 2015 ஒரு பார்வை:

இந்தத் தேர்தலில், ஜனதா தளம் (ஐக்கிய), ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முக்கிய கட்சிகளின் இணைந்து மகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்ததித்து. மகா கூட்டணியின் முக்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வென்றது. இருப்பினும், 2017 ஆம் ஆண்டில், ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நிதீஷ் குமார் மகா கூட்டணியை விட்டு வெளியேறி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. NDA கூட்டணியைப் பொறுத்தவரை, பிஜேபி , ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) ஆகியவை இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) இந்த தேர்தலில் NDA உடன் இணைந்து போட்டியிட்டது.

மகா கூட்டணி போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை

- ராஷ்ட்ரிய ஜனதா தளம்: 101
- காங்கிரஸ்: 101
- ஜனதா தளம் (ஐக்கிய): 42

NDA கூட்டணி போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை

- லோக் ஜனசக்தி கட்சி: 42
- பாரதிய ஜனதா கட்சி: 157
- ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி: 23
- இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா: 21

பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் 2010 ஒரு பார்வை:

2005 தேர்தல்களுக்குப் பிறகு, ஜனதா தளம் (ஐக்கிய) பீகார் சட்டமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக இருந்தது மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியுடன் ஆட்சி செய்து வந்தது. 2010  பிகார் சட்டமன்ற தேர்தல்களில் JDU மற்றும் BJP ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அதேபோல்  ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), லோக் ஜனசக்தி கட்சி இணைந்து தேர்தலை சந்தித்தன. காங்கிரஸ் 243 இடங்களில் போட்டியிட்டது.

போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை

- ஜனதா தளம் (ஐக்கிய): 141
- பாரதிய ஜனதா கட்சி: 102
- ராஷ்ட்ரிய ஜனதா தளம்: 168
- லோக் ஜனசக்தி கட்சி: 75
- காங்கிரஸ்: 243

மேலும் படிக்க - பீகார் தேர்தல் 2025: வாக்காளர்களை ஈர்க்கும் 5 முக்கிய தலைவர்கள் - யார் யார் பாருங்க!

மேலும் படிக்க - பீகார் சட்டமன்ற தேர்தலில் வருகிறது பெரிய மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News