Army Aircraft Accident In UP: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே ராணுவப் பயிற்சி விமானம் ஒன்று குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஒரு மைக்ரோலைட் (Microlight) பயிற்சி விமானம் ஆகும்.
விமானம் விபத்து சம்பவம் நடந்தது எப்படி?
கே.பி. கல்லூரி (KP College) அருகே பறந்துகொண்டிருந்தபோது, விமானம் திடீரென நிலைதடுமாறி அருகிலிருந்த குளத்தில் விழுந்தது. இந்த விமானம் வித்யா வாகினி பள்ளியிலிருந்து (Vidya Vahini School) புறப்பட்டு, அதன் வழக்கமான பாதையில் சென்று கொண்டிருந்தது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கவனித்துள்ளார். உடனடியாகச் செயல்பட்ட அவர், விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்க முயற்சி செய்துள்ளார்.
VIDEO | Uttar Pradesh: A trainee aircraft has reportedly crashed into a water body in Prayagraj. Rescue operations underway. More details are awaited.#Prayagraj
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/r62ZjtoRhh
— Press Trust of India (@PTI_News) January 21, 2026
விமானம் விபத்து மீட்பு நடவடிக்கைகள்
இந்த விமானத்தில் மொத்தம் மூன்று ராணுவ வீரர்கள் இருந்தனர். விமானம் விழுவதற்கு முன்னரே அவர்கள் மூவரும் பாராசூட் மூலம் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானம் விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பாராசூட் மூலம் உயிர் தப்பிய மூன்று வீரர்களும் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர்.
விமானம் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை
தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குளத்தில் விழுந்த விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது இந்த விபத்து குறித்து இந்திய ராணுவம் விசாரணை நீதிமன்றத்திற்கு (Court of Inquiry) உத்தரவிட்டுள்ளது. விமானத்தின் எஞ்சின் கோளாறு அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் காரணங்களால் விபத்து நேரிட்டதா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விபத்தின் துல்லியமான காரணம் என்ன என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









