Indian Navy Destroyed Karachi Port? இந்தியா கடற்படை தாக்குதலில் கராச்சி துறைமுகத்தில் கடற்படை தொடர்ச்சியான ஏவுகணைகளை வீசியுள்ளது எனவும், இந்த தாக்குதல் மூலம் கராச்சி துறைமுகம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ஒரு தகவல் வைரலானது. ஆனால் அது உண்மை இல்லை. வதந்தி எனக் கூறப்பட்டு உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனுனான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய கடற்படை ஏற்கனவே ஐஎன்எஸ் விக்ராந்தை அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இந்த போர் கப்பல் கார்வார் கடற்கரைக்கு அருகில் நிறுத்தப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந் குழுவில் விமானம் தாங்கிக் கப்பல், அழிப்பாளர்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள் மற்றும் பிற துணைக் கப்பல்கள் உள்ளன.
உதாரணமாக, இந்தியாவின் மூன்று படைகளும் சேர்ந்து முதலில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை அழித்துவிட்டன. அதன் பிறகு பாகிஸ்தான் போருக்கு முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்தியப் படைகள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன.
ஜம்மு மற்றும் பஞ்சாபில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு ஒரு பாகிஸ்தானிய F-16 மற்றும் இரண்டு JF-17 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் பாகிஸ்தானின் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பையும் (AWACS) இந்தியா சுட்டு வீழ்த்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் எல்லைக்குள் நடந்துள்ளது.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன, மேலும் அக்னூரில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. பூஞ்சில் இரண்டு காமிகேஸ் ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், பாகிஸ்தான் இரவில் இந்தியாவின் பல இடங்களைத் தாக்க முயன்றது. அதற்கு இந்திய விமானப் பாதுகாப்பு வலுவான பதிலடி கொடுத்தது. இதற்கிடையில், பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஒரு ட்ரோன் ஜம்மு சிவில் விமான நிலையத்திலும் விழுந்தது. அதன் பிறகு இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் தாக்குதல்களை எதிர்கொண்டு அவற்றை செயலிழக்கச் செய்தன.
மேலும் படிக்க - LIVE இந்தியா பாகிஸ்தான் போர் அப்டேட்: ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்!
மேலும் படிக்க - எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் பயங்கர மோதல்.. அமெரிக்கா வைத்த முக்கியமான கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









