Viral Video Of A Man Gave Him A Kiss : இணையத்தில் வைரலாகும் வீடியோக்களுக்கு தற்போது பஞ்சமே இல்லை. இவை லைக்ஸ்காகவும், ஷேர்ஸ்களுக்காகவும் பதிவிடப்படுகிறது. இப்படிப்பட்ட வீடியோக்கள் பெரும்பாலும், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் எக்ஸ் ஆகிய தளங்களில் வெளியிடப்படும். இதில், பல சமயங்களில் பாலியல் வன்புனர்வு குறித்த வீடியோக்களும் வைரலாவதுண்டு. அப்படிப்பட்ட வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓடும் ரயிலில் முத்தம்:
வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு பயணி தான் உறங்கி கொண்டிருக்கும் போது, தனக்கு ஒருவர் முத்தம் கொடுத்து விட்டதாக கூறுகிறார். அந்த வீடியோவில், தனக்கு முத்தம் கொடுத்த நபரை அந்த நபர் அடிக்கிறார். இதில், முத்தம் கொடுத்ததாக சொன்ன அந்த நபர் கீழே இருக்கும் லோவர் பர்த்தில் அமர்ந்திருக்கிறார். அதன் பின்பு, ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டால், அதற்கு “எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது, கொடுத்தேன்” என்கிறார்.
இந்த வீடியோவை ஒரு நபர் ரெக்கார்ட் செய்து கொண்டிருக்கிறார். அவர்தான் அந்த நபரிடம் ஏன் இப்படி செய்தாய் என கேட்கிறார். இந்த வீடியோவில், பல்வேறு நபர்கள் அவரை சுற்றி இருப்பதும், சிலர் அவருடன் சேர்ந்து சண்டைக்கு போவதும் பதிவாகி இருக்கிறது.
முத்தம் கொடுத்த அந்த நபர், தனது மனைவியுடன் பயணித்து இருக்கிறார். சண்டை எழுந்த போது, இதனை பெரிதாக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து பேசும் அந்த வீடியோ எடுக்கும் நபர், “இந்த நபர் எனக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். இங்கிருப்பவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால் யாருமே இதை எதிர்த்து கேட்க வரவில்லை. இந்த நபரின் மனைவி வந்து இதை பெரிதாக்க வேண்டாம் என்கிறார். ஆனால் இதை நான் சும்மா விடப்போவதில்லை” என்று கூறியிருக்கிறார்.
சுற்றி இருப்பவர்களிடமும் அவர் “இதுவே உங்கள் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு நடந்திருந்தால் சும்மா இருப்பீர்களா? இந்த இடத்தில் நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அதனை சும்மா விட்டிருப்பீர்களா?” என்று கேட்கிறார். கடைசியில் அந்த முத்தம் கொடுத்த நபர் அதற்கு தனது வாய்க்குள்ளேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ, எந்த ஓடும் ரயிலில் எடுக்கப்பட்டது, இதில் இருப்பவர்கள் யார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | முதலிரவு முடிந்த அடுத்த நாளே... குழந்தையை பெற்ற மணப்பெண் - ஷாக்கில் மாப்பிள்ளை!
மேலும் படிக்க | பைக் டேங்கில் அமர்ந்து-கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற பெண்! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









