Viral Video Of An Airtel Employee In Mumbai : தமிழகம் உள்ளிட்ட சில தென்னிந்திய மாநிலங்களில், மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை ஒட்டி, இங்கு ஒரு ஏர்டெல் நிறுவன ஊழியரும் அது குறித்த பிரச்சனை ஒன்றை எதிர்கொண்டிருக்கிறார். இது குறித்த வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழிக்கொள்கை குறித்து பேசிய விஷயங்கள், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வெடியாக வெடித்தது. “அனைவரும் இந்தி கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்” என்று மத்திய அரசு கூற, “தேவைப்பட்டால் கற்றுக்கொள்வோம், ஆனால் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்களை கட்டாயப்படுத்த கூடாது” என்பது தமிழ் நாடு உள்பட பிற மாநில அரசுகளின் நிலைபாடாக உள்ளது. இந்த நிலையில், மக்களும் இடையிடையே “இந்தி தெரியாது போடா” ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோ, மும்பையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், சிம்மில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக ஒரு நபர் ஏர்டெல் ஊழியரிடம் ஏதோ கேட்கப்போய், சண்டையாகி இருக்கிறது. அப்போது, அந்த நபர் மாராத்தியில் பேசுமாறு கூற, அதற்கு அந்த பெண் “நான் ஏன் மராத்தி பேச வேண்டும்? மகாராஷ்டிராவில் இருந்தால் மராத்தி பேச வேண்டும் என ஏதேனும் சட்டம் எழுதப்பட்டுள்ளதா? என்னிடம் மரியாதையாக பேசுங்கள்” என்கிறார்.
एअरटेल प्रशासनाने नोंद घेऊन कर्मचाऱ्यांना मराठी भाषेचं महत्त्व समजावून सांगावं. महाराष्ट्रात एअरटेल चे असंख्य मराठी ग्राहक आहेत ते कायम ठेवायचे असतील तर योग्य पाउलं उचला नाहीतर मुंबईत एअरटेल ची गॅलरी दिसणार नाही. इतर भाषेचा विरोध नाही पण मराठी भाषिक ८०% कर्मचारी असायलाच हवे.… pic.twitter.com/xRBO2nSzqh
— Akhil Chitre अखिल चित्रे (@akhil1485) March 11, 2025
தொடர்ந்து பேசும் அவர், “எனக்கு ஒன்றும் மராத்தி முக்கியமான மொழி கிடையாது. நாம் இந்துஸ்தானில் இருக்கிறோம். யார் வேண்டுமானாலும், எந்த மொழி வேண்டுமானாலும் பேசலாம்” என்கிறார்.
பாஜகவின் மேலவை உருப்பினர், சித்ரா வாக், சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவின் மொழியை வளர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது அவர், “யாராவது மகாராஷ்டிராவில் தங்கியிருந்தால், அவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் அந்த மொழியை கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அந்த மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருபவர்கள், ஏர்டெல் நிறுவனம் கண்டிப்பாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இவர்களுக்கு மகாராஷ்டிராவில் மராத்திய மொழி பேசும் பலர் நுகர்வோராக இருப்பதாகவும், அவர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், இங்கிருக்கும் ஏர்டெல் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 80% பேர் மராத்தி மொழி பேச தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கின்றனர். அந்த பெண், தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாவும், தன்னை திட்டியதாகவும் அந்த வீடியோ எடுக்கும் நபர் கூறுகிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | முதலிரவு அறையில் நடந்த சம்பவம்! காலையில் அனைவருக்கும் அதிர்ச்சி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









