)
Viral Video Of Woman Beating Her Husband : இணையத்தில் சமீப காலமாக வைரல் ஆகி வரும் வீடியோக்கள் அடிவயிற்றை கலக்க வைக்கும் அளவிற்கு பயங்கரமாக இருக்கின்றன. விலங்குகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது, ஒரு பெண், தனது கணவரை ரோட்டில் இழுத்து போட்டு அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கணவனை இழுத்து போட்டு அடித்த மனைவி:
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் தனது கணவரை ரோட்டில் இழுத்துப்போட்டு அடிக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது.
A disturbing video shows a wife publicly Slapping her husband just because he isn’t earning
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 8, 2025
pic.twitter.com/UqEJ7xITbW
தனது கணவரின் சட்டை காலரை பிடித்து அடிக்கும் அந்த பெண், சத்தமாக அவரை திட்டவும் செய்கிறார். அவரது கணவர் அடியை தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த பெண் தொடர்ந்து அவரை சட்டையை பிடித்து அடித்துக்கொண்டே இருக்கிறார். இதற்கிடையே அந்த பெண், அருகில் இருப்பவர்களிடம் ஏதோ குறை கூறும் காட்சிகளும் பதிவாகியிருக்கிறது.
காரணம் என்ன?
அந்த பெண், இப்படி அனைவர் மத்தியிலும் அவரது கணவரை அடித்ததற்கு காரணம் என்ன தெரியுமா? கணவர் வேலைக்கு செல்லாததுதான். பல மாதங்களாக வேலைக்கு எதுவும் செல்லாமல், சம்பாத்தியம் எதுவும் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்த பெண்ணின் சம்பாத்தியத்தில்தான் அனைத்து வீட்டு செலவுகளையும் பார்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்த அவர், இறுதியில் கோபத்தின் உச்சிக்கு சென்று தனது கணவரை ரோட்டில் நிற்க வைத்து அடித்திருக்கிறார்.
இதை பார்த்த பல நெட்டிசன்கள், “இதுவே ஒரு ஆண் இப்படி செய்திருந்தால் சண்டைக்கு வந்திருப்பீர்கள். போலீஸாருக்கு தகவல் கொடுத்திருப்பீர்கள். பெண் என்பதால்தானே, இப்படி விட்டு வைத்திருக்கிறீர்கள்” என்று கூறி வருகின்றனர். மேலும், ஒரு சிலர் “வை திஸ் கொலவெறி” என்று அந்த பெண்ணை கேட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ