’பறக்கும் சீக்கியர்’ மில்கா சிங் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்

இந்திய தடகளதத்தில் ஜாம்பவானாக திகழும் பஞ்சாபை சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் (Milkha Singh), மிக வேகமாக ஓடும் திறமையினால், பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படுகிறார் 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 19, 2021, 06:44 AM IST
  • ஆசிய தடகள போட்டிகளில்மில்கா சிங் 5 முறை தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • மில்கா சிங்குக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
  • சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் இன்று உயிரிழந்தார்.
’பறக்கும்  சீக்கியர்’ மில்கா சிங்  காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்

பறக்கும் சீக்கியர் என புகழப்பட்ட இந்திய தடகள வீரர், ஜாம்பவான் மில்கா சிங் (Milkha Singh) கொரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. 

கடந்த மாதம் மில்கா சிங்கிற்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மில்கா சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் கொரோனா தொற்று காரணமாக அவரது மனைவி நிர்மல் கவுர் உயிரிழந்தார். இந்த நிலையில் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் இன்று உயிரிழந்தார். 

இந்திய தடகளதத்தில் ஜாம்பவானாக திகழும் பஞ்சாபை சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் (Milkha Singh), மிக வேகமாக ஓடும் திறமையினால், பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படுகிறார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி  (PM Narendra Modi) இரங்கல் தெரிவித்துள்ளார்.  ஒப்பற்ற வீரராக தொகழ்ந்த மில்கா சிங்கின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர் எண்ணற்ற இந்தியர்களின் இடத்தில் நீங்கா இடம் பெற்றவர் என கூறியுள்ளார். 

ஆசிய தடகள போட்டிகளில்மில்கா சிங் 5 முறை  தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 1960-ல் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், மில்கா சிங்  400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 45.73 வினாடிகளில் இலக்கை கடந்து 4-வது வந்து சாதனை படைத்தார். தேசிய அளவில் சுமார் 40 ஆண்டுகள் இந்த சாதனை முறியடிக்கப்படாமலேயே இருந்தது. மில்கா சிங்குக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உட்பட பல இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | DRDO 2-DG மருந்து அனைத்து கொரோனா திரிபுகளிலும் செயலாற்றுகிறது: ஆய்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News