ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதுவரை மறைமுக தாக்குதல்களை நடத்தி வந்த இந்தியா, நேற்று முதல் நேரடி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய நிலையில், இதுவரை 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீது கடந்த 1965ஆம் ஆண்டு முதலே பல இராணுவ ஆபரேஷன்களை நடத்தி உள்ளது இந்தியா. அது குறித்து பார்க்கலாம்.
Operation riddle: இந்த ஆபரேஷன் 1965ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவம் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.
Operation Ablaze: 1965ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு ஆபரேஷனை நடத்தியது இந்தியா. குஜராத் உள்ள ரான் ஆஃப் கட்ச் பகுதியில் ஏற்பட்ட பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவல் காரணமாக இந்திய எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தடுக்கும் வகையில், Operation Ablaze நடத்தப்பட்டது.
Operation Cactus Lily: இந்த ஆபரேஷன் கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீது நடத்தப்பட்டது. இந்திய விமானப்படை பாகிஸ்தான் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதன் மூலம் வங்கதேசம் என்ற நாடு உருவானது.
Operation Trident: 1971ஆம் ஆண்டு இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் துறைமுகத்தில் இந்திய கடற்படை நடத்திய தாக்குதலே Operation Trident ஆகும். இந்த தாக்குதல் நடத்தப்பட்ட டிசம்பர் 4ஆம் தேதியை இந்தியா கடற்படை நாடாக கொண்டாடி வருகிறது.
Operation Meghdoot: 1984ஆம் ஆண்டு இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது. சியாச்சின் சிகரத்தில் பாகிஸ்தானின் ஊடுருவல் அதிகமாக இருந்ததால், அதனை கட்டுப்படுத்த இந்த Operation Meghdoot மேற்கொள்ளப்பட்டது.
Operation Vijay: 1999ஆம் ஆண்டு இந்த ஆபரேஷன் விஜய் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்திய ராணுவம் மீட்க நடத்தப்பட்டது. இதைதான் காரிகில் வார் என கூறுகிறோம்.
Operation Parakram: இந்த ஆபரேஷன் 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இது டெல்லி நாடாளுமன்ற கட்டித்திற்குள் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய நடவடிக்கை ஆகும்.
Surgucal Strike Operation X: பாகிஸ்தான் இந்தியா எல்லை பகுதியில் பாகிஸ்தானின் ஆதரவு தீவிரவாதிகளின் பகுதிகளை அழிக்க இந்திய ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கை இதுவாகும். 2016ஆம் ஆண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Operation Bandar: காஷ்மீரில் இந்திய ராணுவம் பயணித்த ராணுவ வாகனம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் 40க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் பந்தர் நடத்தப்பட்டது.
Operation Sindoor: காஷ்மீரின் பகல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 பொதுமக்களை கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.
மேலும் படிங்க: Harpy drone: பாகிஸ்தானை மிரட்டிய ஹார்பி ட்ரோன்.. முழு விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









