Live: டெல்லி சட்டப்பேரவை தேர்தல்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 1 மணி நிலவரம் இதோ!

Today Election News Live Updates In Tamil: டெல்லி சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செய்திகள் மட்டுமின்றி அனைத்து வகையான செய்திகளின் உடனடி அப்டேட்களையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 8, 2025, 07:00 AM IST
    Today Latest News Live Updates: இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ...
Live Blog

Today Election News Live Updates In Tamil: டெல்லியில் உள்ள மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும், 2013க்கு பின் ஆட்சி அமைக்காத காங்கிரஸ் கட்சியும், 1998க்கு பின் ஆட்சிக்கு வராத பாஜகவும் டெல்லியை கைப்பற்ற களம் கண்டுள்ளன. மொத்தம் 699 வேட்பாளர்கள் இன்று டெல்லி தேர்தல் களத்தில் மோதுகின்றனர். இந்த தேர்தல் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு தொகுதிக்கும் இன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2021இல் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவேராவும், 2023இல் திருமகன் ஈவேராவின் மறைவுக்கு பின் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை விகேஎஸ் இளங்கோவன் மீண்டும் காங்கிரஸ் சார்பில் களமிறங்கினார்.

ஆனால், இம்முறை இத்தொகுதியில் திமுகவே போட்டியிடுகிறது. அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக vs நாம் தமிழர் கட்சி என இந்த இடைத்தேர்தல் களம் அமைந்துள்ளது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகிய இரண்டின் வாக்கு எண்ணிக்கையும் வரும் பிப். 8ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்றைய தேர்தல் வாக்குப்பதிவு செய்திகள் மட்டுமின்றி அனைத்து வகையான செய்திகளின் உடனடி அப்டேட்களையும் இங்கு காணலாம்.

8 February, 2025

  • 06:56 AM

    டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

    வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கும். வாக்கு எண்ணிக்கை கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும். ஒழுங்கான மற்றும் பாரபட்சமற்ற எண்ணும் செயல்பாட்டை எளிதாக்க 5,000 ஊழியர்கள் கொண்ட ஒரு பணியாளர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் அதிகாரி (RO) நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார், இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) அட்டவணைப்படுத்தல் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை பாதை (VVPAT) சீட்டு சரிபார்ப்பு ஆகியவை அடங்கும். துல்லியத்தை பராமரிக்க, ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஐந்து VVPAT இயந்திரங்கள் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படும். (மேலும் படிக்க)

  • 20:34 PM

    பெண் நிர்வாகி குற்றச்சாட்டு!

    த.வெ.க பதவிக்கு ஜாதி மற்றும் பணம் அடிப்படையில் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் பதவி வழங்குவதாக தவெக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் படிக்க

  • 19:55 PM

    விஜய் சாரின் நடனத்தில் ஒரு தனி கிரேஸ் இருக்கும்!

    'என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு கதையும், கதாபாத்திரமும், அதனை இயக்கும் இயக்குநரும் தான் காரணம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார். மேலும் படிக்க

  • 19:40 PM

    கொலஸ்ட்ரால் முதல் டீடாக்ஸ் வரை... இந்த மூலிகை டீக்கு ஈடு இணை இல்லை

    சமையலறையில் நாம் பயன்படுத்தும் மசாலாக்களில் பல, ஆரோக்கிய நன்மைகளும், மருத்துவ பண்புகளும் நிறைந்தது. இதில் தனியா, சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து தயாரிக்கப்பட்ட மூலிகை டீ பல வகைகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். (மேலும் படிக்க)

  • 19:25 PM

    பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் எப்படி இருக்கு?

    அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் முதல் விமர்சனத்தை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க

  • 19:01 PM

    அனாவசியமாக பேசி அடிவாங்கிய பூஜா ஹெக்டே!

    Pooja Hegde Ala Vaikunthapurramuloo Movie Backlash : நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தை தமிழ் படம் என்று கூறி விட்டார். இதனால், ரசிகர்கள் அவர் மீது பயங்கர கடுப்பில் உள்ளனர். (மேலும் படிக்க)

  • 18:26 PM

    ஓய்வூதியம் திட்டம் குறித்து அரசு முக்கிய முடிவு

    Government Employees Latest News: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு. ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட குழு அமைப்பு (முழு விவரம்)

  • 18:25 PM

    கந்த சஷ்டி கவசம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

    Benefits Of Chanting Kanda Shasti Kavasam : முருகனை பிடித்தவர்களுக்கு கந்த சஷ்டி கவசம் பற்றி தெரியாமல் இருக்காது. காலையில் தினமும் எழுந்த இதை படிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? (மேலும் படிக்க)

  • 18:01 PM

    வெளியானது கருத்து கணிப்புகள்!

    இன்று டெல்லி சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் படிக்க

  • 17:35 PM

    'தண்டேல்' ஒரு காதல் கதை தான்!

    கார் பந்தயம் என்பது பொழுதுபோக்கு தானே தவிர, அதில் முறையாக பயிற்சி எடுக்கவில்லை என்று நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

     

  • 17:27 PM

    அடாவடி எடையை அசால்டாய் குறைக்கும் மலிவான இந்திய உணவுகள்

    பல இயற்கையான எளிய வழிகளில் உடல் எடையை கட்டுப்படுத்தலாம். உடல் எடையை குறைக்க உதவும் சில சமையலறை மசாலாக்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 17:26 PM

    மூளை ஷார்ப்பாக இருக்க விஸ்வநாதன் ஆனந்த் சொல்லும் டிப்ஸ்!

    Food Habits Of Viswanathan Anand : செஸ் உலக சாம்பியனாக விளங்குபவர் விஸ்வநாதன் ஆனந்த். இவரது மூளை ஷார்பாக செஸ்ஸில் நகர்த்தும் காய்களும் சரியாக இருக்கும். அதற்காக அவர் சாப்பிடும் உணவுகள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 17:23 PM

    டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பௌலர்கள்

    சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் மற்ற டி20 லீக் தொடர்கள் அனைத்தையும் சேர்த்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்களை இங்கு காணலாம். 

  • 17:20 PM

    புதிய வருமான வரி மசோதா... எளிமையான சட்டங்கள், எளிமையான மொழி

    New Income Tax Bill: தற்போதுள்ள வருமான வரி சட்டத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் வகையில், புதிய வருமான வரி மசோதாவின் வரைவு பிப்ரவரி 6ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. (மேலும் படிக்க)

  • 17:15 PM

    கெட்ட கொழுப்பை ஓட ஓட விரட்டும் சூப்பர் உணவுகள்: ட்ரை பண்ணி பாருங்க

    கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா? சில ஆரோக்கியமான உணவுகளின் மூலம் இதை சரி செய்யலாம். அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 16:48 PM

    கிருஷ்ணகிரியில் கொடூரம்: மாணவியை கர்ப்பமாக்கிய 3 ஆசிரியர்கள் கைது

    8ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கர்ப்பமாக்கிய 3 அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த முழு பின்னணியை அறிய இதை படிக்கவும்.

  • 16:34 PM

    டெல்லி தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு

    Delhi Election Exit Poll 2025 News In Tamil: டெல்லியில் வாக்குப்பதிவு முடிந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புக வெளியாகும். எப்போது? ​​எங்கு? பார்ப்பது (முழு விவரம்)

  • 16:26 PM

    கூலி, கைதி 2க்கு பிறகு லோகி இயக்கும் படம்!

    Lokesh Kanagaraj Movie Line Ups : பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து நடிக்க சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அவர் இயக்க இருக்கும் படங்கள் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 16:09 PM

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 - பிற்பகல் 3 மணி நிலவரம்

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவாகி உள்ளன. 

  • 16:06 PM

    அதிக ஆற்றலை தரும் கற்றாழை சாறு!

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய கற்றாழை சாறு நாள் முழுவதும் தேவையான இயற்கையான ஆற்றல் மூலமாக செயல்படுகிறது. மேம்பட்ட செரிமானம், தோல் ஆரோக்கியம், சிறந்த வாய்வழி சுகாதாரம் போன்றவற்றிற்கு உதவுகிறது. மேலும் படிக்க

     

  • 16:04 PM

    டெல்லி தேர்தல் 2025 - மதியம் 3 மணி நிலவரம்

    டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின் மதியம் 3 மணி நிலவரப்படி, 46.55% வாக்குகள் பதிவாகி உள்ளது. 

  • 15:58 PM

    Crime News In Tamill: கேரளாவில் கொடூரம்

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஹோட்டல் உரிமையாளர் அவரின் 2 ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து, அங்கு பணியாற்றிய பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து அந்த பெண் கீழே குதித்ததில் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தின் முழு விவரத்தையும் இங்கு படிக்கலாம்.

  • 15:51 PM

    பதஞ்சலி குழுமம் உ.பி.யில் 1600 கோடி முதலீடு: 3000 பேருக்கு வேலைவாய்ப்பு

    பதஞ்சலி குழுமம் ஏற்கனவே துணை குத்தகை மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) இடத்தை வழங்கும் ஒரு தொழில்துறை பூங்காவை உருவாக்கி வருகிறது. இந்த புதிய உணவு மற்றும் மூலிகை பூங்கா இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்தும்.

  • 15:24 PM

    டெல்லியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

    Delhi Assembly Election: டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது. மேலும் படிக்க

     

  • 15:20 PM

     WhatsApp குழுவில் இந்த வகை மெஸ்சேஞ்களை அனுப்பினால்... வழக்குகள் பாயும்

    வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் குழுவில் அனுப்பப்படும் சில செய்திகள் தொடர்பாக சில விதிகள் உள்ளன. சில வகையான மெஸ்சேஞ்களை அனுப்புவது உங்களை சட்டச் சிக்கலில் சிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்

  • 15:18 PM

    யானையை விட பெரிய மிருகம் எது தெரியுமா?

    ஒரு மிருகம் யானையை விட பல மடங்கு பெரியதாக இருக்கும். அது என்ன மிருகம் தெரியுமா? (மேலும் படிக்க)

  • 14:47 PM

    PF உறுப்பினர்களுக்கு அரசின் பரிசு: வட்டி விகிதம் அதிகரிக்கின்றதா? முக்கிய அப்டேட் இதோ

    பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அரசாங்கம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • 14:37 PM

    மட்டன் ஈரல் vs சிக்கன் ஈரல்

    மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரல் இரண்டில் எதில் அதிக நன்மைகள் என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்...

  • 14:30 PM

    NPS கட்டணங்கள் விதிகளில் மாற்றம்

    ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்கைத் திறப்பதற்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  • 14:30 PM

    குடும்பஸ்தன் ஓடிடி ரிலீஸ்!

    Kudumbasthan OTT Release : மணிகண்டன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

  • 14:26 PM

    அதிகரித்து வரும் அதன் விலை!

    Gold Price Today: தங்கத்தின் விலை உயரும் போது ​​தங்கம் வாங்குபவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தற்போது தமிழகத்தில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.  மேலும் படிக்க

     

  • 14:24 PM

    அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

    8th Pay Commission: பணவீக்க விகிதங்கள், வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கத்தின் நிதி ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் ஃபிட்மென்ட் காரணி தீர்மானிக்கப்படுகிறது. மேலும் படிக்க

  • 13:52 PM

    உங்களை வளர விடாமல் செய்யும் கெட்ட பழக்கங்கள்!

    Bad Habits Will Never Let You To Be Rich : பணத்தால் மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியாது என பிறர் கூறக்கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் பணம் கையில் இருந்தால்தான் மன உளைச்சல் இல்லாமல் இருக்க முடியும். ஆனால், நம்மில் பல பேரின் கையில் பணம் தங்குவதே இல்லை. இது குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 13:40 PM

    மூத்த குடிமக்களுக்கு மெகா திட்டம்: வட்டியில் மட்டும் ரூ.24,00,000 வருமானம், இன்னும் பல நன்மைகள்

    மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் நன்மைகள் என்ன? இதன் கணக்கீடுகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்

  • 13:39 PM

    டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2025: மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்

    டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின் மதியம் 1 மணி நிலவரப்படி, 32.50% வாக்குகள் பதிவாகி உள்ளது. 

  • 13:37 PM

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - மதியம் 1 மணி நிலவரம்

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகி உள்ளன. 

  • 13:20 PM

    டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம்

    டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், இதுவரை வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவாகி உள்ளது. இதன் பின்னணியை இங்கு படிக்கலாம். 

  • 13:15 PM

    மருத்துவர்களின் அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி.. நோயாளிகளுக்கு நியாயம் கிடைக்க அதிரடி நடவடிக்கை

    நாட்டில் அலட்சியமாக இருக்கும் மருத்துவர்களுக்கு எதிரான போராட்டத்தில் நோயாளிகளின் கரங்கள் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முடிவில், மருத்துவர்களுக்கு எதிராக நோயாளிகள் புகார் அளிக்கும் வசதியை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • 13:04 PM

    ஒருநாள் அணியில் பும்ரா இல்லை!

    சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக நடைபெற உள்ள இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

     

  • 12:57 PM

    இளைஞருக்கு அடித்த ரூ.33 கோடி ஜாக்பாட்!

    Kerala Man Wins Dubai Lottery : துபாயில் வசித்து வரும் ஒரு இந்திய இளைஞருக்கு, 33 கோடி ஜாக்பாட் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 12:45 PM

    Deepseek: டீப்சீக் செயலிக்கு தடை விதித்த அரசு... விலகி இருக்க மக்களுக்கு அறிவுரை

    தென் கொரியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற பல நாடுகளும் இந்த செயலியின் தரவு பாதுகாப்பு கொள்கைகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன. ஆஸ்திரேலியா இதை ஒரு படி மேலே கொண்டு சென்று அனைத்து அரசு சாதனங்களிலிருந்தும் இதை அகற்ற அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு குறித்து இங்கே காணலாம்.

  • 12:26 PM

    டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025

    Key Candidates & Constituency In Delhi: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் முக்கியத் தொகுதிகள் பட்டியல் குறித்து பார்ப்போம் (முழு விவரம்)

  • 11:59 AM

    Tamilnadu News: பழைய ஓய்வூதிய திட்டம் - வந்தது அப்டேட்

    பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிய இதனை கிளிக் செய்யுங்க.

  • 11:50 AM

    அஜித்திற்கு தோல்வியை தந்த பிப்ரவரி ரிலீஸ்!

    Ajith Kumar February Movie Releases : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், நாளை (பிப்., 6) வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் அஜித்தின் இன்னும் சில படங்களும் இந்த மாதத்தில் வெளியாகியுள்ளன. (மேலும் படிக்க)

  • 11:23 AM

    அரசு ஊழியர்களுக்கு ஷாக்: டிஏ அரியர் கிடைக்குமா, கிடைக்காதா? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட்

    கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்காது என நிதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.

  • 10:30 AM

    வைட்டமின் டி குறைபாடு... ஆரம்ப அறிகுறிகள் இவை தான்

    Vitamin D Deficiency: இன்றைய ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை காரணமாக வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய தரவுகள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (மேலும் படிக்க)

  • 10:20 AM

    PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ், புதிய விதிகள் அறிமுகம்: இனி ஜெட் வேகத்தில் வெலை நடக்கும்

    சமீபத்திலும் இபிஎஃப்ஓ அதன் 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் முக்கியமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

     

  • 10:17 AM

    யார் இந்த எட் ஷீரன்?

    Ed Sheeran Chennai Concert : பிரபல ஆங்கில பாடகர் எட் ஷீரன், இன்று நந்தனம் YMCA மைதானத்தில் தனது இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ஆனால் இவர் யார் என்பது பெரும்பாலான சென்னை வாசிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவர் யார் என்பது குறித்து, இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • 09:42 AM

    IND vs ENG ODI: வருண் சக்ரவர்த்தியால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வரும் மாற்றம்

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலா 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நாளை தொடங்குகிறது. தற்போது இந்திய அணி சேர்க்கப்பட்டுள்ள வருண் சக்ரவர்த்தியால் இந்த முக்கிய வீரரின் வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது. 

Trending News