)
Lionel Messi India Tour: லியோனல் மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணம்
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் முழு விவரத்தை அறிய இதை கிளிக் செய்து பார்க்கலாம்.
Logical Mistakes In Coolie | கூலி படத்தில் இருந்த பெரிய லாஜிக் ஓட்டைகள்!
மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம், கூலி. இந்த படத்தில் இருக்கும் சில லாஜிக் ஓட்டைகளை பார்த்த ரசிகர்கள் அது குறித்து பேசி வருகின்றனர். (மேலும் படிக்க)
La Ganesan Passed Away: இல கணேசன் காலமானார்
நாகாலாந்து ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான இல. கணேசன் உடல்நலக்குறைவால் இன்று (ஆக. 15) காலமானார். (மேலும் படிக்க)
Man Leaves 1 Crore Job For Wife | 1 கோடி சம்பளம்..இருந்தும் ராஜினாமா செய்த இளைஞர்!
ஒருவர், தனக்கு 1.2 கோடி சம்பளம் கொடுத்த வேலையை ராஜினாமா செய்ததாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது, தற்போது பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. (மேலும் படிக்க)
Did Madhampatty Rangaraj Left His Second Wife Joy | 2வது மனைவியை கழட்டி விட்ட மாதம்பட்டி ரங்கராஜ்?
மாதம்பட்டி ரங்கராஜ், தனது வாழ்விலும் இன்ஸ்டாகிராமிலும் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
FASTag Annual Pass: பாஸ்ட்டேக் வருடாந்திர பாஸ்
பாஸ்ட்டேக் வருடாந்திர பாஸ் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்து படிக்கவும்.
Woman Struggles To Breathe Crowd Laughs Video | மூச்சுவிட சிரமப்பட்ட பெண்..கலாய்த்த மக்கள்!
ஒரு பெண், டிரெயினில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதை பார்த்து, மக்கள் பலர் கைக்கொட்டி சிரித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)
Dry Fruits to control Blood Sugar: சுகர் லெவலை குறைக்க உதவும் நட்ஸ்
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் சில உலர் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tamil Nadu Voters List: எம்பி கலாநிதி வீராசாமி பேட்டி
பீகாரில் பாஜக நடத்தி வரும் வாக்காளர்கள் நீக்கம் தொடர்ந்தால் 2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என டாக்டர் கலாநிதி வீராசாமி எம்பி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Liver Damage Symptoms: நிபுணர்கள் கூறுவது என்ன?
கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் எனென்ன அறிகுறிகள் தோன்றும்? அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Coolie Day 1 Worldwide Gross | கூலி உண்மையான வசூல் இதுதான்!
கூலி படம் முதல் நாளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. (மேலும் படிக்க)
Mrunal Thakur Body Shaming Apology | மன்னிப்பு கேட்ட மிருணாள் தாகூர்!
நடிகை மிருணாள் தாகூர், பிரபல நடிகை பிபாஷா பாசுவை உருவ கேலி செய்து பேசிய வீடியோ இணையத்தில் பெரிதாக வைரலானது. இந்த நிலையில், அவர் அது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Post Office Time Deposit Scheme: அஞ்சல் அலுவலக நேர வைப்புத் திட்டம்
வங்கியை விட சிறந்த வருமானம் கிடைக்கும் பல தபால் அலுவலக திட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக பிரபலமாக உள்ள தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
MK Stalin 9 Announcements: மு.க. ஸ்டாலின் 9 அறிவிப்புகள்
79வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றியபோது 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை என்னென்ன என்பதை அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.
Coolie Vs War 2 Reviews | கூலி படத்தை விடுங்க..வார் 2 படம் என்னாச்சு?
கூலி திரைப்படத்திற்கு போட்டியாக வார் 2 படம் ஆகஸ்ட் 14ஆம் தேதியான நேற்று வெளியானது. இந்த நிலையில், இரண்டு படங்களுக்கு ரசிகர்கள் எப்படிப்பட்ட விமர்சனங்களை வழங்கியிருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Guru Nakshatra Peyarchi: குரு நட்சத்திர பெயர்ச்சி
குரு பகவான் ஆகஸ்ட் 13 ஆம் தேதி புனர்பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பெயர்ச்சி ஆனார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்,
DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட். கூடிய விரைவில் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வரக்கூடும். சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
Coolie Box Office Collection Day 1 | கூலி படத்தின் முதல் நாள் வசூல்!
கூலி படம் சுதந்திர தினத்தையொட்டி வெளியாகியிருக்கும் நிலையில், இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)
Independence Day 2025 PM Modi Speech Highlights: ஆயுதப் படைககளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சுதந்திர தின உரையில், பல முக்கிய விஷயங்களை பற்றி பேசினார். பிரதமர் உரையின் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுதந்திர தினம் 2025: முதல்வர் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பு!
சுதந்திர தினம் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தலமைச்செயலகம் அமைந்திருக்கும் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார். (மேலும் படிக்க)
"இளைஞர்களுக்கு ரூ. 15000 வழங்கப்படும்.. ஆனால்" - பிரதமர் மோடி அறிவிப்பு!
Narendra Modi: நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
Flipkart Independence Day Sale 2025: பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2025
பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2025 -இல் கிடைக்கும் 5 சிறந்த பிராண்டட் போன்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
79வது சுதந்திர தினம்: "அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது" - பிரதமர் மோடி
Narendra Modi Speech: ஆப்ரேஷன் சிந்தூர் தாக்கிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக 79வது சுகந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசினார். (மேலும் படிக்க)
Independence Day 2025 Live: விகாசித் பாரத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில், இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ₹1 லட்சம் கோடி திட்டமான பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கார் யோஜனாவைத் தொடங்குவதாக அறிவித்தார்.
Independence Day 2025 Live: நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு, பிரதமர் மோடி குட் நியூஸ்
இந்த தீபாவளியில் நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய பரிசு கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் கூறினார். ஒரு உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். சாமானிய மக்களின் வரிகள் பெருமளவில் குறைக்கப்படும். இது அன்றாடப் பொருட்களை மலிவாக்கும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Independence Day 2025 Live: 'IWT அநீதி இழைத்தது...' செங்கோட்டையில் பிரதமர்
79வது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கூறினார். "நமது சொந்த விவசாயிகள் தண்ணீரை இழந்த நிலையில், இந்தியாவின் ஆறுகள் எதிரி நாட்டிற்கு நீர்ப்பாசனம் செய்தன. இப்போது, இந்தியாவின் நீர் பங்கின் மீதான உரிமை இந்தியாவிற்கும் அதன் விவசாயிகளுக்கும் மட்டுமே சொந்தமானது" என்று அவர் கூறினார்.
"விவசாயிகளின் நலன்கள் மற்றும் தேசிய நலன்களில் சமரசம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனிமேல் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழு-வரும் வாரங்களில் முக்கிய முடிவுகள்
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. அவர்களுக்கு 4 பெரிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Independence Day 2025 Live: இயற்கை நம்மை சோதித்து வருகிறது
செங்கோட்டையில் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, "இயற்கை நம் அனைவரையும் சோதித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகளை நாம் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் அனுதாபங்கள். மாநில அரசுகளும் மத்திய அரசும் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண முயற்சிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் முழு பலத்துடன் இணைந்து செயல்படுகின்றன," என்று கூறினார்.
Independence Day 2025 Live: பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துக்களில், "அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், ஒரு விக்ஸித் பாரதத்தை கட்டியெழுப்பவும் இன்னும் கடினமாக உழைக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். ஜெய் ஹிந்த்!" என்று கூறியுள்ளார்.
Wishing everyone a very happy Independence Day. May this day inspire us to keep working even harder to realise the dreams of our freedom fighters and build a Viksit Bharat. Jai Hind!
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
Independence Day 2025: சுதந்திரத்துக்கு உரம் போட்ட உன்னத உள்ளங்கள்
ஒரு காலத்தில் அடிமை கோலத்தில் இருந்த நாம் இன்று நாட்டு மக்களுக்கு முன்னோடியாய் இருக்கிறோம். நாம் இன்று உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறோம். இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படையாய் அமைந்தது சுதந்திரம். அதை அடைய நாம் கடந்து வந்த பாதை பலரது தியாகத்தையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அந்த பாதையை இங்கே சற்று திரும்பிப் பார்ப்போம்.
Independence Day India 2025: பாருக்குள்ளே நல்ல நாடு
பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தின் பயனால் அடிமைகளாய் இருந்த நம் நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் துவங்கினர். பல சுதந்திர போராட்ட வீரர்களின் நாட்டுப்பற்று, விடா முயற்சி, சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவை நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரத்தின் அடித்தளமாக இருக்கின்றன.
Independence Day India 2025: 79வது சுதந்திர தின கொண்டாட்டங்கள்
இந்திய மக்களாகிய நாம் இன்று 79வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இன்னும் சில மணி நேரங்களில் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றுவார். இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் ‘புதிய பாரதம்’ என்று பொருள்படும் ‘நயா பாரத்’.
79th Independence Day India 2025 Live Updates: 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு சகாப்தத்தின் புதிய தொடக்கத்தைப் பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுதந்திர தினம் நினைவூட்டுகிறது. இந்த ஆண்டும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் ’புதிய பாரதம்’ என்று பொருள்படும் ‘நயா பாரத்’.