Today April 25 Latest News Live Updates: பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில், இந்திய எல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்படும் ஆதில் தோகர் (எ) ஆசிப் ஷேக் என்பவரது வீடு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் டிரால் நகரில் உள்ள இவரது வீடு குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உள்ளூர் முதல் உலகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்ஸை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.










