Live Now

LIVE இந்தியா பாகிஸ்தான் போர் அப்டேட்: என்ன நடக்கிறது? தாக்குதல் அபாயம்

Latest News About India And Pakistan War: சண்டிகரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டது. அதாவது "ட்ரோன் தாக்குதல்" குறித்து பொதுமக்களை எச்சரிக்கப்பட்டனர். 

LIVE இந்தியா பாகிஸ்தான் போர் அப்டேட்: என்ன நடக்கிறது? தாக்குதல் அபாயம்
Image Credit: India Pakistan War Latest News In Tamil
09 May 2025 10:07 PM (IST)

India Pakistan War: பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் மீண்டும் முறியடிப்பு

பாகிஸ்தான் இரண்டாம் நாளாக இன்றும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானில் மொத்தம் 11 இடங்களில் தாக்குதல் தொடுக்க முயற்சித்ததாகவும், இந்தியா அதனை முறியடித்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும்.

09 May 2025 09:37 PM (IST)

விமான நிலையங்கள் மூடல்

இந்தியா-பாகிஸ்தான்: விமான நிலையங்கள் மூடல்; அமைச்சகம் உத்தரவு (மேலும் படிக்க)

09 May 2025 09:12 PM (IST)

எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்... ஜம்மு காஷ்மீரில் Blackout

பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த இந்தியா பல முக்கிய மாநிலங்கள் மற்றும் நகரங்களில் பிளாக் அவுட் மற்றும் உஷார் நிலையை அமல்படுத்தியுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

09 May 2025 08:17 PM (IST)

India Pakistan War: 11 மணிநேர அமைதிக்கு பின்...

பாகிஸ்தான் 11 மணிநேர தாக்குதலுக்கு பின் தற்போது எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மீண்டும் பீரங்கித் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

09 May 2025 07:49 PM (IST)

India Pakistan War: அணு ஆயுத தாக்குதல் நடந்தால்...

அணு ஆயுத தாக்குதல் நடந்தால் மக்கள் செய்ய வேண்டியவை என்ன?, செய்யக்கூடாதவை என்ன? என்பதை இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

09 May 2025 06:59 PM (IST)

Balochistan Fighting To Be Separate Country | கலவரக் காடான பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்  ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வரும் நிலையில் சொந்த நாட்டுக்குள்ளும் அடிவாங்கி வருகிறது என்ன நடந்தது பார்க்கலாம். (மேலும் படிக்க)

09 May 2025 06:08 PM (IST)

India Pakistan War: பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி - வெளியுறவுத்துறை விளக்கம்

பாகிஸ்தான் நேற்று இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் தொடுக்க முயற்சித்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அளிக்கப்பட்ட விளக்கத்தை படிக்க இதை கிளிக் செய்யவும். 

09 May 2025 05:39 PM (IST)

Dangers China Might Face India Pakistan War | போரால் சீனாவுக்கு வரும் பாதிப்பு என்ன?

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடுமையான போர் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இதனால் சீனாவிற்கு என்ன ஆபத்து வரும் தெரியுமா? (மேலும் படிக்க)

09 May 2025 05:16 PM (IST)

பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதலை நடத்தினால்... 

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் நிறைந்த நாடுகள், மேலும் இரண்டு நாடுகளிடமும் பல சிறிய மற்றும் பெரிய அணு ஆயுதங்கள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் அணு ஆயுதத் தாக்குதல்களை நிறுத்த முடியுமா என்பது தொடர்பான விரிவான தகவல்களை பெற இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

09 May 2025 04:46 PM (IST)

India Pakistan War: பாகிஸ்தானின் மிகப்பெரிய சதியை முறியடித்த இந்தியா

நேற்று பாகிஸ்தான் இந்தியாவின் 24 நகரங்கள் மீது சுமார் 500 டிரோன்கள் மூலம் தொடுத்த தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.

09 May 2025 04:04 PM (IST)

IPL 2025 Suspended: இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு

ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், பிசிசிஐ இதுகுறித்து அளித்த விரிவான அறிக்கையை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.

09 May 2025 03:43 PM (IST)

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்த மேட்- இன் - இந்தியா ஆகாஷ் ஏவுகணைகள்

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க, வியாழக்கிழமை இந்திய ஆயுதப்படைகள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் தரையிலிருந்து வான் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பயன்படுத்தின. இது குறித்து மேலும் அறிய இந்த கட்டுரையை அவசியம் படிக்கவும்.

09 May 2025 03:02 PM (IST)

சக்திவாய்ந்த இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா?

வளர்ந்த நாடுகள் அனைத்தும் கண்டிப்பாக தங்களின் ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும். அந்த வகையில் உலகின் சக்திவாய்ந்த ராணுவ படை வைத்துள்ள 5 நாடுகளை பற்றி பார்ப்போம். மேலும் படிக்க

09 May 2025 02:25 PM (IST)

India Pakistan War: பாகிஸ்தான் F-16 போர் விமானத்தை பயன்படுத்தினால் என்னவாகும்?

பாகிஸ்தான் F-16 போர் விமானத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தினால் அமெரிக்கா சும்மா இருக்காது. இதுகுறித்து விரிவாக அறிய இதை கிளிக் செய்து படிக்கவும். 

09 May 2025 02:14 PM (IST)

Operation Sindoor Indian Army Officer Dead | ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு!

இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெறும் சமயத்தில், ஒரு இராணுவ வீரர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

09 May 2025 02:06 PM (IST)

இந்தியா பாகிஸ்தான் போர்! இனி ஆசியக் கோப்பை போட்டிகள் இருக்காது?

பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் போட்டிகளை விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இனி ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

09 May 2025 01:05 PM (IST)

பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையை அடுத்து ஐபிஎல் 2025 போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

09 May 2025 01:01 PM (IST)

Tamil Nadu Latest Updates: ஜம்மு காஷ்மீரில் உள்ள 52 தமிழக மாணவர்கள்?

ஜம்மு காஷ்மீரில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களின் நிலை குறித்தும், அவர்களை இங்கு அழைத்துவர முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிய இதை கிளிக் செய்து படியுங்கள்.

09 May 2025 12:25 PM (IST)

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் ரத்து

IPL 2025: இந்தியா - பாகிஸ்தான் இடையே மூண்டிருக்கும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து செய்யப்பட உள்ளது. எஞ்சிய போட்டிகளை நடத்த இரண்டு பிளான்கள் குறித்து பிசிசிஐ யோசித்து வருகிறது. (முழு விவரம்)

09 May 2025 12:07 PM (IST)

India Pakistan War: 7 தீவிரவாதிகள் கொலை

ஜம்மு காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லை வாயிலாக நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும்.

09 May 2025 11:55 AM (IST)

India Pakistan War: தயாராகும் தலைநகரம்

இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லி ஐடிஓ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள "ஏர் சைரன் தொழில்நுட்பத்தை" பரிசோதனை செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

09 May 2025 11:54 AM (IST)

தள்ளாடும் பாகிஸ்தான் பொருளாதாரம் 

India Pakistan War : இந்தியா கொடுத்த மரண அடியில் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், உலக நாடுகள் கடன் கொடுக்க வேண்டும் என எக்ஸ் பக்கத்தில் கேட்டது. பின்னர், அது ஹேக்கர்களின் வேலை என மழுப்பியுள்ளது. (முழு விவரம்)

09 May 2025 11:52 AM (IST)

India Pakistan War: சீனாவின் நிலைப்பாடு

குறிப்பாக சீனாவிடைருந்து பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்கள் தேவையான நேரத்தில் திறம்பட செயல்படாததால் பாகிஸ்தான் கடும் கோவத்தில் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கான தனது ஆதரவை காட்டிக்கொள்ளாமல் தூது போகும் அமைதி புறாவாக சீனா நடித்து வருகிறது.

 

09 May 2025 11:45 AM (IST)

அடுத்த 3 நாட்களுக்கு ஏடிஎம்-கள் மூடப்படுமா?

சமூக ஊடக தளங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஏடிஎம்கள் மூடப்படும் என்ற வதந்தி பரவிய நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு PIB அறிவுறுத்தியுள்ளது. மேலும் படிக்க

09 May 2025 11:38 AM (IST)

ராஜஸ்தானில் ரெட் அலர்ட்

ராஜஸ்தான் எல்லையில் ரெட் அலர்ட்: மக்கள் வெளியேற்றம், அடுத்து என்ன? (மேலும் படிக்க)

09 May 2025 11:23 AM (IST)

India Pakistan War | சண்டிகரில் பதற்றம்.. 

Chandigarh Siren alert பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் சண்டிகரில் சைரன் அபாய ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(முழு விவரம்)

09 May 2025 10:58 AM (IST)

How Many Wars India Won Against Pakistan | இந்தியாவிற்கு எத்தனை வெற்றி?

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இதுவரை நடந்த எத்தனை போரில் இந்தியாவிற்கு வெற்றி கிட்டியுள்ளது என்பதை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

 

09 May 2025 10:29 AM (IST)

Latest News About India And Pakistan War: பீகாரில் ரெட் அலர்ட்

பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் ANI இடம் கூறுகையில், “மத்திய அரசின் உத்தரவின்படி, முழு பீகாரும் ரெட் அலர்ட்டில் உள்ளது. பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டம் வங்கதேசம் மற்றும் நேபாளத்துடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.. இது மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதி. நாளை, முதல்வர் நிதிஷ் குமார் பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவார்… அனைத்து அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, சுகாதார அதிகாரிகளின் விடுமுறைகள், காவல்துறை அதிகாரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளனர்… நாளை மறுநாள், அவர் ரக்சவுலில் ஒரு கூட்டத்தை நடத்துவார்… பீகாரில், எந்தவொரு அவசரகால சூழ்நிலையையும் சமாளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” எனக் கூறினார் 

09 May 2025 10:27 AM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்படும் சூழல் நிலவு வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

 

09 May 2025 10:10 AM (IST)

Latest News About India And Pakistan War இந்திய ராணுவத்திற்கு ஆதரவு: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி

பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும் மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடத்தப்பட இருக்கிறது.

09 May 2025 08:59 AM (IST)

India Pakistan War: உலகின் முக்கிய நாடுகள் யாருடன் உள்ளன? 

உலகின் முக்கிய நாடுகள் யாருடன் உள்ளன? இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடுகள் எவை? பாகிஸ்தான் பக்கம் எந்த நாடுகள் உள்ளன? இந்த தகவல்களை இங்கே காணலாம்.

 

 

09 May 2025 08:50 AM (IST)

ஐபிஎல் நிர்வாகம் எடுத்த முக்கிய முடிவு!

India Pakistan War: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சண்டை நேற்று இரவு முழுவதும் நடைபெற்ற நிலையில், ஐபிஎல் 2025 போட்டிகள் பாதியில் நிறுத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் படிக்க

09 May 2025 08:49 AM (IST)

India Pakistan War:வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்

ஆபரேஷன் சிந்தூரால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானின் ஆகிய மாநிலங்களில் எல்லை நகரங்களை குறிவைக்க முயற்சித்து வருகிறது.

09 May 2025 08:40 AM (IST)

இந்தியா பாகிஸ்தான் போர் - அமெரிக்கா ரியாக்ஷன்

India Pakistan war : இந்தியா பாகிஸ்தான் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா? என்பது குறித்து அமெரிக்கா துணை அதிபர் ஜேடி வான்ஸ் வெளிப்படையாக பேசி உள்ளார். (முழு விவரம்)

09 May 2025 08:12 AM (IST)

யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்!

ஒவ்வொரு மாநில அரசும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் படிக்க

09 May 2025 07:45 AM (IST)

India Pakistan: இந்தியா - பாக் மோதல்! இரவு முழுவதும் நடந்தது என்ன?

India Pakistan war: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் படிக்க

09 May 2025 06:59 AM (IST)

IPL 2025 : மிகப்பெரிய குட்நியூஸ் கொடுத்த மத்திய அரசு

IPL 2025: தரம்சாலாவில் சிக்கித் தவிக்கும் டெல்லி மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் பிளேயர்களை சிறப்பு ரயில் மூலம் டெல்லி அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. (முழு விவரம்)

09 May 2025 06:34 AM (IST)

இந்தியா பாகிஸ்தான் போர் :

India Pakistan War: ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய நள்ளிரவு நரித்தந்திரத்தை இந்தியா துல்லியமாக முறியடித்தது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

09 May 2025 03:30 AM (IST)

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸின் அறிக்கை

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் முக்கிய அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் அவர், "நாங்கள் ஒரு போரின் நடுவில் ஈடுபடப் போவதில்லை, அது அடிப்படையில் எங்கள் வேலையல்ல' என்றார். "நாங்கள் செய்யக்கூடியது என்னவென்றால், இந்த இருநாடுகளிடையே கொஞ்சம் கொஞ்சமாக பதற்றத்தைக் குறைக்க முயற்சிப்பதுதான், ஆனால் நாங்கள் போரின் நடுவில் வர மாட்டோம். அதைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை. உங்களுக்குத் தெரியும், அமெரிக்கா இந்தியர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. பாகிஸ்தானியர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. எனவே, இந்த விஷயத்தை இராஜதந்திர வழிகள் மூலம்  தொடர முயற்சி செய்வோம். இது ஒரு பரந்த பிராந்தியப் போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பதே எங்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும். இப்போது, ​​அது நடக்கப் போவதில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.

09 May 2025 03:10 AM (IST)

பாகிஸ்தானின் பஹாவல்நகரில் பயங்கர வெடி சத்தம்

பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்நகர் கண்டோன்மென்ட் அருகே பலத்த வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூடு சத்தங்களும் கேட்ட என உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

09 May 2025 03:04 AM (IST)

கராச்சி துறைமுகத்தை அட்டாக் செய்த இந்திய கடற்படை

Karachi Port Latest News: இந்திய கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்கி படு பயங்கரமாக சேதாரம் ஏற்படுத்தி விட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. (மேலும் படிக்க)

09 May 2025 02:40 AM (IST)

அமெரிக்கா அட்வைஸ்

India Pakistan War Latest News: இந்தியாவுக்கு ஆத்ரவாக அமெரிக்கா இருந்தாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இருநாடுகளுக்கும் முக்கிய கோரிக்கை வைத்துள்ளது. தாக்குதலுக்கு வேண்டாம் என்றும், பேச்சு வார்த்தையில் ஈடுபடுங்கள் என்றும் அமெரிக்கா கோரிக்கை. (மேலும் படிக்க)

09 May 2025 02:31 AM (IST)

மீண்டும் மின்தடை

பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால், ஜம்மு பகுதியில் மீண்டும் மின் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சைரன்களும் ஒலித்தன.

09 May 2025 02:18 AM (IST)

இண்டிகோ தனது பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

India Pakistan War News: மே 8 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானீர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள், மே 22 ஆம் தேதி வரை தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தாலோ அல்லது பயணத்தை மீண்டும் திட்டமிட்டாலோ, கட்டணம் வசூலிக்கப்படாது என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

09 May 2025 02:00 AM (IST)

India Pakistan War Video: வெறும் 25 நிமிடங்களில் பழிதீர்த்த இந்தியா...! பாகிஸ்தானைக் கை கழுவிய சீனா?...

09 May 2025 01:57 AM (IST)

அரபிக் கடலில் இந்தியா-பாகிஸ்தான் கடற்படைகள் துப்பாக்கிச் சூடு பயிற்சி

அரபிக் கடலில் பல்வேறு இடங்களில் கடற்படை துப்பாக்கிச் சூடு பயிற்சிக்கான அறிவிப்பை இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியிட்டுள்ளன.

மே 8-13 வரை, இந்திய கடற்படை அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில், பாகிஸ்தான் கடற்படை மே 9-12 வரை துப்பாக்கிச் சூடு பயிற்சியையும் திட்டமிட்டுள்ளது.

09 May 2025 01:54 AM (IST)

உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சவுத் பிளாக்கில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். 

இந்தக் கூட்டத்தில், எல்லையில் தற்போதைய நிலைமை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எந்தவொரு சவாலையும் சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும்.

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

Shiva Murugesan is a seasoned media leader in the Indian digital landscape, specializing in the intersection of traditional journalism and modern SEO technology. With a proven track record of scaling digital news platforms, he excels in managing high-pressure news environments and delivering real-time updates to millions of readers.