Union Budget 2025 Latest News: நடப்பாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வரும் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 68% வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதை அடுத்து தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்தன் நாகேஸ்வரன் தலைமையிலான குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 68% வரை இருக்கும் என கணிக்கப்பட்டதாக கூறினார்.
2025 ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி 64% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல் ஒட்டுமொத்த பணவீக்கம் 52% என தெரிவிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை உடனக்குடன் தெரிந்துக்கொள்ள ZEE NEWS TAMIL சேனலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.










