Madhya Pradesh Plane Crash: இந்திய விமானப்படையின் சுகோய் SU-30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய போர் விமானங்கள் பயிற்சியின் போது மத்தியப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Su-30 விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், மிராஜ் 2000 விமானத்தில் ஒரு பைலட் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், இரண்டு விமானிகள் விபத்துக்கு பின்னர் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மூன்றாவது விமானியை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது. இரண்டு போர் விமானங்களும் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.


விசாரணை தொடக்கம்


மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்களால் எடுக்கப்பட்ட வீடியோக்கள், தரையில் விமானத்தின் உதிரி பாகங்கள் சிதறியிருப்பதை காட்டுகிறது. விமானம் நடுவானில் மோதி விபத்துக்கு வழிவகுத்ததா என்பதை ஆராய விமானப்படை விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.



மேலும் படிக்க | உக்ரைனுக்கு போர் டாங்கிகளைக் கொடுக்கும் நாடுகள்! அமெரிக்காவை குறைசொல்லும் வடகொரியா


"நடுவானில் மோதியதா இல்லையா என்பதை அறிய விமானப்படை விசாரணை நீதிமன்றம் அதன் விசாரணையை தொடங்கியுள்ளது. விபத்தின் போது Su-30 விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர் என்றும் மிராஜ் 2000 விமானத்தில் ஒரு பைலட் என்றும் தெரிவிக்கப்பட்டது. விமானப்படையின் ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு சென்றடையும் போது இரண்டு விமானிகள் பாதுகாப்பாக இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாவது விமானியின் இருப்பிடம் விரைவில் தெரியவரும்" என்று தகவல்கள் தெரிவித்தன.


இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து இந்திய விமானப்படைத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


முதலமைச்சர் ட்வீட்


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது ட்விட்டர் பதிவில், "மொரேனாவில் உள்ள கோலாரஸ் அருகே விமானப்படையின் சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. விமான விபத்தின் மீட்பு பணியுடன் ஒத்துழைக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். விரைவான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள். விமானத்தின் விமானிகள் பத்திரமாக இருக்க நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அந்த மூன்றாவது விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், அவரின் உடல்பாகங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மத்திய பிரதேசத்தின் 100 கிமீ தொலைவில் உள்ள ராஜஸ்தானின் பரத்பூரில் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரத்பூரின் உச்சைன் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 


மற்றொரு விமான விபத்து 


இதற்கிடையில், 100 கிமீ தொலைவில் உள்ள ராஜஸ்தானின் பரத்பூரில் மற்றொரு விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவை தொடர்புடையதா என்பதை அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை. நகரின் உச்சைன் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.


மேலும் படிக்க | Army Plane Crashed: இந்திய விமானப்படையின் சுகோய் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்து!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ