மத்திய பிரதேசத்தில் தன் கணவரை கொல்லும் போது நீ கருப்பாக இருக்கிறாய் என்று கூறி உயிரை பறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆரம்பத்தில் வீட்டுக்கு கொள்ளை என்று நினைத்த இந்த சம்பவம் பின்னர் திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டதாக இருந்தது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
என்ன நடந்தது?
மத்திய பிரதேசத்தில் உள்ள, கோண்டிகேடா என்கிற கிராமத்தில் பிரியங்கா என்ற பெண் அடையாளம் தெரியாத நபர்கள் தனது வீட்டிற்குள் நுழைந்து தன்னை தாக்கி விட்டு கணவர் தேவகிருஷ்ணாவை கொன்றுவிட்டு தப்பி சென்றதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதை அந்த பகுதியை சேர்ந்த போலீசார் சென்று விசாரித்த போது, வீடு கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் அந்த சம்பவ இடத்தில் பிரியங்கா அழுது கொண்டிருப்பதையும் பார்த்தனர். வீட்டில் இருக்கும், நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் போது நடந்த தகராறு தேவ கிருஷ்ணாவை கொள்ளையர்கள் கொலை செய்திருக்க கூடும் இன்று போலீசார் நினைத்த சமயத்தில் தான் அவர்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் அதை தவறென நிரூபித்து இருக்கின்றன. இதை வைத்து தான் அவர்கள் இது அரங்கேற்றப்பட்ட கொலை மற்றும் கொள்ளை என்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர்.
பிரியங்காவிடம், போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து இருக்கின்றனர். அப்போது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த வாக்கு மூலங்கள் பிரியங்காவிற்கும் அவரது கணவர் தேவகிருஷ்ணாவிற்கும் திருமணம் ஆனதிலிருந்து பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள், ஆரம்பத்தில் இருந்தே இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை. இதில் இன்னொரு அதிர்ச்சிக்குரிய விஷயமாக, பிரியங்கா சொன்ன ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தை அவர்கள் அனைவரும் கூறியிருக்கின்றர். “நீ கருப்பாக இருக்கிறாய், நான் உன்னை விட சிறந்தவனுக்கு தகுதியானவள்” என்று பிரியங்கா கூறிக்கொண்டே இருப்பாராம். இதை காரணம் காட்டி அவர் பலமுறை விவாகரத்து கேட்டதாகவும் கூறியிருக்கின்றனர்.
ரகசிய காதல்!
பிரியங்காவும், கமலேஷென்கிற நபரும் 2020ஆம் ஆண்டு முதல் ரகசிய காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதலுக்கு, தேவ்கிருஷ்ணா இடையூறாக இருந்ததால், இவர் கதையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றனர். அப்படி நடந்தேறியதுதான் இந்த கொலை-கொள்ளை நாடகம் என்பது தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து போலீசார் பேசிய போது, பிரியங்காவின் காதலன் கம்லேஷ் தனது தோழன் சுரேந்திராவை கூலிப்படை போல அழைத்திருப்பதாகவும், இந்த கொலையை செய்வதற்காக அவருக்கு சுமார் ரூ.1 லட்சம் ஒப்பந்தம் செய்ததாகவும் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில், பிரியங்காவின் கணவர் தேவகிருஷ்ணா தூங்கிக்கொண்டிருந்த போது அவரால் எதிர்க்க முடியாது என்பதால் இந்த கொலையை இரவில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். தேவ்கிருஷ்ணாவை கூர்மையான ஆயுதத்தில் தாக்கியதோடு, அவரை ஒருவர் அழுத்தி பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ