Maharashtra Ladki Bahin Yojana Scam : தமிழ்நாட்டில், மாதாம் தோறும் மகளிருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டங்களிலேயே இது மிகச்சிறந்த திட்டம் என்று பேசப்படுகிறது. மகாராஷ்டிராவிலும் இதே போல, மகளிருக்கு “லட்கி பெஹன் யோஜ்னா” எனும் பெயரில் ஒரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், மகளிருக்கு மாதா மாதம் ரூ.1,500ம் வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு, அந்த மாநிலத்தில் இருந்து பல கோடி பட்ஜெட்டும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், பல ஆயிரம் ஆண்கள், பெண்கள் பெயரில் இந்த திட்டத்தால் பயனடைந்து வருவது தெரிய வந்துள்ளது.
பெண்களாக சலுகை பெற்ற ஆண்கள்:
இந்த லட்கி பெஹன் யோஜ்னா திட்டத்தின் கீழ் பயன்பெற, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதில், மகாராஷ்ரிராவை சேர்ந்த 14,298 ஆண்கள், இந்த ஆன்லைன் தளத்தை ஏமாற்றி தங்களை பெண்கள் போல பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த விஷயம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை நடத்திய ஒரு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில், சுமார் ரூ.21.44 கோடியானது 14,298 ஆண்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்டுள்ளது. லட்கி பெஹன் யோஜ்னா திட்டம் தொடங்கப்பட்டு, 10 மாதங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் பேசியது:
“பெண்களுக்கான லட்கி பெஹன் யோஜ்னா திட்டம், ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இதில் ஆண்களை பயனடைய வைக்கும் எந்தவித நோக்கமும் இல்லை. அவர்கள் பெற்ற பணத்தை, அவர்களிடமிருந்தே மீண்டும் பெற்றுக்கொள்வோம். அவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால், அதற்குறிய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை நடத்திய விசாரணையில் இன்னும் அதிர்ச்சிகர தகவல்கள் பல வெளிவந்துள்ளன. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியற்ற பயணாளர்களை சேர்த்ததால், மொத்தம் ரூ.1,640 கோடி இழப்பை, அரசு சந்தித்துள்ளதாகவும் அதன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களால் ஏற்பட்ட பாதிப்பு:
இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், தகுதியற்ற பெண்களும் பயன்பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, 7.97 லட்சம் தகுதியற்ற பெண்கள், இதனால் பயன்பெற்று வந்திருக்கின்றனர். இதற்கு தகுதியான வயது வரம்பு, 65ஆக இருக்கிறது. ஆனால், அந்த வயதை தாண்டிய சுமார் 2.87 லட்சம் பெண்கள் இந்த சலுகையை பெற்று வருகின்றனர். இவர்களால் மட்டும் அரசுக்கு சுமார் ரூ.431 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாம். வீட்டில் நான்கு சர்க்கர வாகனங்கள் வைத்திருக்கும் பெண்களும் இதற்கு தகுதி உடையவர்களாக கருதப்படவில்லை. இருப்பினும், அவர்களும் இந்த திட்டத்தால் பயணடைந்து வந்திருக்கின்றனர்.
வெடித்த பிரச்சனை!
ஆண்கள் எப்படி இந்த திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றிருக்கின்றனர்? அவர்களுக்கு உதவியது யார்? என்பது போன்ற பல்வேறு கேழ்விகள் எழுந்துள்ளன. இதற்கென்று தனிப்படை அமைத்து விசாரிக்கவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் இப்படி ஏமாற்றியவர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
லட்கி பெஹன் யோஜ்னா:
லட்கி பெஹன் யோஜ்னா திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்கள் மாதா மாதம் பயனடைந்து வருகின்றனர். ஒருவரின் பொருளாதார நிலையை கண்டறிந்து, 21-65 வயது வரை இருக்கும் பெண்களுக்கு இந்த மகளிர் உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இதில் உதவித்தொகை வாங்குபவர்கள், வருடத்திற்கு ரூ.2.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெருபவராக இருக்க வேண்டும். 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பாஜக தலைமையிலான மற்றும் சிவசேனா, என்பிசி பிரிவுகளின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்க பெரும் காரணமாக இருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









