)
Maharashtra Woman Doctor Death Case, Crime News: பெண் மருத்துவர் ஒருவர் போலீசாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் சதாரா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து உயிரிழந்தார். அவர் காவல் உதவி ஆய்வாளரால் ஒருவரால் கடந்த 5 மாதங்களில் நான்கு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அந்த பெண் தனது உள்ளங்கையில் எழுதிவைத்ததன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
(வாசகர்கள் கவனத்திற்கு: தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்)
பாதிக்கப்பட்ட பெண், பால்டன் துணை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பத்னே, அந்த பெண் மருத்துவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாரவும் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். கோபாலின் தொடர்ச்சியான அத்துமீறலே பெண் மருத்துவர் உயிரைவிடுவதற்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
நேற்றிரவு பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில், இன்று மகாராஷ்டிரா முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் கோபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொள்ளும் முன், தனது மரணத்திற்கான காரணத்தை விரிவாக தனது உள்ளங்கையில் எழுதிவைத்திருக்கிறார். அதில், "நான் இறந்ததற்குக் காரணம் காவல் ஆய்வாளர் கோபால் பத்னே. அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக அவர் என்னை பாலியல் வன்கொடுமை, மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்றார்.
இதுமட்டுமின்றி, அதற்கு முன்னரும் காவலர் கோபால் குறித்து புகார் அளித்திருக்கிறார். அதாவது, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி, தீபாவளிக்கு முந்தைய நாள் பல்டான் நகரின் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கடிதத்தை அளித்திருக்கிறார். அந்த கடிதத்தில் மொத்தம் 3 போலீசார் மீது பெண் மருத்துவர் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த புகார் கடிதத்தில் பத்னே மட்டுமின்றி துணைப்பிரிவு காவல் ஆய்வாளர் பாட்டீல், உதவி காவல் ஆய்வாளர் லாட்புத்ரே ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண் மருத்துவர் அந்த கடிதத்தில், "நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். எனவே, இந்த தீவிரமான விஷயம் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் உத்தரவின்படி, தற்போது கோபால் சஸ்பெஸ்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ