)
பொதுமக்களின் எதிர்கால நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்திய அஞ்சல் துறை வழங்கும் சேமிப்பு திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் செயல்படுவதால், இவற்றில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானதாகவும், அதிக வருமானம் தரக்கூடியதாகவும் உள்ளன. குறிப்பாக, பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், கிராமப்புற மக்களின் நிதி பாதுகாப்பிற்காகவும் செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிராம் சுரக்ஷா யோஜனா ஆகியவை சூப்பர் ஹிட் திட்டங்களாக திகழ்கின்றன.

கிராமப்புற மக்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம் தான் கிராம் சுரக்ஷா யோஜனா. இந்த திட்டத்தில், ஒருவர் தினமும் சுமார் 50 ரூபாய் சேமிப்பதன் மூலம், முதிர்வு காலத்தில் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற முடியும். 19 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் சேரலாம். குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை தேர்வு செய்யலாம். பிரீமியம் தொகையை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம். உதாரணமாக, 19 வயதில் இத்திட்டத்தில் சேரும் ஒருவர், மாதம் ரூ.1,515 (தினமும் சுமார் ரூ.50) பிரீமியம் செலுத்தினால், 55 வயதில் முதிர்வு தொகையாக ரூ.31.60 லட்சமும், 60 வயதில் ரூ.34.60 லட்சமும் பெறலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெறும் வசதி உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு பாலிசியை சரண்டர் செய்யும் வசதியும் உண்டு.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு அற்புதமான சேமிப்பு திட்டம்தான் 'சுகன்யா சம்ரிதி யோஜனா' எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 2015ல் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கணக்கை தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தினால் போதுமானது.
இத்திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. கணக்கு தொடங்கி 21 ஆண்டுகள் முடிந்ததும் அல்லது பெண்ணுக்கு 18 வயதுக்கு பிறகு திருமணம் ஆகும்போதும் கணக்கை முடித்து மொத்த தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். பெண்ணின் 18 வயதில், உயர்கல்வி தேவைக்காக கணக்கில் உள்ள தொகையில் 50% வரை எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு வருமான வரி சட்டம் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களும் சாதாரண மக்களும் எளிதில் முதலீடு செய்து, தங்கள் நிதி இலக்குகளை பாதுகாப்பாக அடைய வழிவகை செய்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ