Mahila Samridhi Yojana: சர்வதேச மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பெண்கள் மீதான பழமைவாத சிந்தனைகளை துடைத்தெறியவும், பெண் கல்வி, பெண் சுதந்திரம், பெண் முன்னேற்றம் என உள்ளிட்ட விஷயங்களில் அடுத்தடுத்த பாய்ச்சலை மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தில் பல்வேறு முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன.
Mahila Samridhi Yojana: மகிளா சம்ரித்தி யோஜனா திட்டம்
அந்த வகையில், டெல்லியில் தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு மகிளா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை வரும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று அறிமுகப்படுத்த உள்ளது. 1993ஆம் ஆண்டுக்கு பின்னர் பாஜக தற்போதுதான் டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கிறது. 2025 பிப்ரவரியில் நடந்த சட்டப்பரேவை தேர்தலில், 48 தொகுதிகளை பாஜக வென்றது. ஆட்சி அமைத்த பின்னர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த இந்த மகளிருக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்த இருக்கிறது.
Mahila Samridhi Yojana: மாதந்தோறும் ரூ.2,500
மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதாந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். அதாவது, ஆண்டுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் ஆகும். இந்த ஊக்கத்தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும். ஆம் ஆத்மி கட்சி மகளிருக்கு ரூ.2,100 கொடுக்கும் என அறிவித்திருந்த நிலையில், பாஜக ரூ.2,500 வழங்கும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி இணையத்தளமும் தொடங்கப்பட்டுள்ளது, அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டம் குறித்த சில அப்டேட்களும் தற்போது வெளியாகி உள்ளது.
Mahila Samridhi Yojana: திட்டத்தை பெற தகுதிகள் என்ன?
மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 18 முதல் 60 வயதான பெண்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தில் பயனைடய சில தகுதிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய நாட்டு குடிமகளாக இருக்க வேண்டும், டெல்லியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு வேலையில் இருப்பவர்களும், அரசின் மற்ற நிதியுதவிகளை பெறுபவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.
Mahila Samridhi Yojana: ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும்?
மேலும், ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது. வரி செத்துபவர்களாலும் விண்ணபிக்க இயலாது. அந்த வகையில், டெல்லியில் இந்த திட்டத்திற்கு தகுதிவாய்ந்த 15-20 லட்சம் பயனாளர்கள் இருப்பார்கள் டெல்லி அரசு கணித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையின்படி, டெல்லியில் மொத்தம் 72 லட்சம் பெண்கள் வசிக்கின்றனர். அதில் 50 சதவீதம் பேர் வாக்குச் செலுத்தி உள்ளனர். இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் சுமார் 20 லட்சம் பெண்கள் இருக்கிறார்கள். இந்த திட்டம் தேவையுள்ள மகளிருக்கு உதவிடும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தேர்தல் ஆணையத்திடம் இருந்து லேட்டஸ்ட் வாக்காளர் பட்டியலையும் டெல்லி அரசு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
Mahila Samridhi Yojana: ஆதார் அட்டை முக்கியம்
இணையதளம் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை மிக முக்கியம். ஆதார் அட்டையில் உள்ள பெயர், இடம், முகவரி, வங்கிக் கணக்கு, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு ஆகியவற்றை நீங்கள் இணையதளத்தில் ஆவணங்களுடன் பதிவேற்ற வேண்டும். அந்த இணையதளமே நீங்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவரா இல்லையா என்பதை தீர்மானித்துவிடும். நீங்கள் வரி செலுத்துபவராக இருந்தாலோ அல்லது முதியோர் உதவித்தொகை அல்லது கைம்பெண் உதவித்தொகையை பெற்று வருபவராக இருந்தால் அதுவே தானாக விண்ணப்பத்தை நீக்கிவிடுமாம். தமிழ்நாட்டில் இதுபோன்று பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | பெண்கள் மாதம் ரூ.2,500 பெறலாம்... தகுதிகள் என்ன? விண்ணபிப்பது எப்படி?
மேலும் படிக்க | முதலிரவு முடிந்த அடுத்த நாளே... குழந்தையை பெற்ற மணப்பெண் - ஷாக்கில் மாப்பிள்ளை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









