போதையில் நள்ளிரவில் நிர்வாணமாக நடனமாடிய ஆண்,பெண் IT ஊழியர்கள்!

தனியார் அமைப்புகள் மூலமாகவும் ஆன்லைன் செயலிகள் மூலமாகவும் அவ்வப்போது ஆங்காங்கே 'ரேவ் பார்ட்டி' என்ற கலாச்சாரம் நடந்து வருவது வழக்கமாக இருக்கிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 20, 2021, 01:20 PM IST
போதையில் நள்ளிரவில் நிர்வாணமாக நடனமாடிய ஆண்,பெண் IT ஊழியர்கள்!

கர்நாடகா :  தனியார் அமைப்புகள் மூலமாகவும் ஆன்லைன் செயலிகள் மூலமாகவும் அவ்வப்போது ஆங்காங்கே 'ரேவ் பார்ட்டி' என்ற கலாச்சாரம் நடந்து வருவது வழக்கமாக இருக்கிறது.

ஆரவாரமும் துள்ளலும் தான் இந்த 'ரேவ் பார்ட்டி 'என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் இது ஒரு இரவு நேர போதை விருந்துதான். இதில் மாணவர்களும் IT பெண்களும் கூட பங்கேற்று போதையில் ஆபாசமாக நிர்வாணமாக நடனம் ஆடி மகிழ்வது வழக்கமாக இருந்து வருகிறது.  அப்படித்தான் 'ஹை ஆப் டாட் காம்' என்ற செயலி மூலமாக இரவு நேர போதை விருந்து நடனத்திற்கு முன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

it

இதில் மாணவர்கள்,IT கம்பெனி பணியாளர்கள், விடுதியில் தங்கி வேலை பார்க்கும் பெண்கள், நடனமாடும் பெண்கள் உட்பட பலரும் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.  கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான 'ஆனெக்கல்' என்கிற இடத்தில் அமைந்திருக்கும் சொகுசு விடுதியில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 40 பேர் பங்கேற்று இருக்கிறார்கள்.  நேற்று முன்தினம் இரவு முழுவதும் இசை நடன நிகழ்ச்சி நடக்க மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தி 40 பேரும் போதையில் மிதந்து இருக்கிறார்கள்.

it

இதில் சில நடன அழகிகளும் பங்கேற்று நிர்வாணமாக நடனமாடி மகிழ்வித்து இருக்கிறார்கள். அதை பார்த்து போதையில் இருந்தவர்கள் நிர்வாணமாக நடனமாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த கொண்டாட்டம் குறித்து சிலர் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்து விட, அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். சுற்றிவளைத்த போலீசார் 35 பேரை கைது செய்து விட்டனர்.  இதில் 5 பேர் தப்பி ஓடி இருக்கிறார்கள். அவர்களையும் தீவிரமாக தேடி கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  போதை பொருட்களை பயன்படுத்தியது, நிர்வாணமாக நடனம் ஆடியது என்பது உட்பட 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News