ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மாநிலத்திற்கு ₹.1000 கோடி நிதி!!
போனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு!!
போனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு!!
வங்க கடலில் உருவான ஃபானி புயல் சூறாவளியாக மாறி வெள்ளிக்கிழமை காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. அதில், பெரிதும் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைத்து, சாய்ந்துக் கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சூறாவளிக் காற்றில் கூரைகள், ஜன்னல்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கட்டடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுமார் ஒருலட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை, உணவு ,உறைவிடம் போன்ற உதவிகளை முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ரயில், விமானம் , தொலைத் தொடர்பு, குடிநீர் விநியோகம், மின்விநியோகம் போன்ற சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், போனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒடிசா கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் உடன் சென்றனர். பின்னர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, ஒடிசா அரசு மற்றும் மத்திய அரசு இடையேயான தகவல் தொடர்பு மிக நன்றாக உள்ளது. நானும் அனைத்தையும் கண்காணித்தேன். அரசின் ஒவ்வொரு அறிவுறுத்தலை ஏற்று, மக்கள் செயல்பட்டது பாராட்டதக்கது. மத்திய அரசு ஒடிசாவிற்கு ஏற்கனவே ரூ.381 கோடி ஒதுக்கி உள்ளது. தற்போது மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட உள்ளதுள்ளதாக பிரதமர் மோடி தெரிவிவத்தார்.
முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சிக்குட்பட்ட அரசாங்கத்திற்கும், மத்திய நிலையத்திற்கும் இடையில் ஒரு அரசியல் குற்றம் சாட்டப்பட்டது. பிரதமர் மோடி ஒடிசா முதல்வர் பட்நாயக் மற்றும் மேற்கு வங்காளம் ஆளுநர் Keshari நாத் திரிபாதி ஆகியோர் புயல் குறித்து பேசியதாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசமுன்வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.
பிரதமர் மோடி இரண்டு தடவை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் தோல்வியடைந்ததாக மத்திய அரசு கூறியது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், மம்தா அலுவலகத்தில் அவர் தேர்தலுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மற்றும் அவர் திரும்பியவுடன் அழைப்புகள் திரும்பப் பெறப்படும் என்று கூறினார். இதையடுத்து, மம்தாவை சந்தித்த பிரதமர் மோடி, "நான் ஃபானி சூறாவளியைப் பற்றி பேசுவதற்கு அழைத்தபோது என்னைப் பேசவில்லை" என்றார். அதற்க்கு அவர் தான் "தேர்தல் பணியில் பிஸியாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.