காணாமல் போன சிறுமி-காத்திருந்த பேரதிர்ச்சி..! தந்தை கைது..!

Man Killed His 5 Year Old Daughter : தன்னுடன் தகராறு செய்த பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்கு தனது ஐந்து வயது மகள் சென்றதால் கடுப்பில் மகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .  

Written by - Bhuvaneshwari P S | Edited by - Yuvashree | Last Updated : Mar 7, 2025, 01:42 PM IST
  • சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த மோகித் மிஸ்ரா
  • மகளை கொன்ற விவகாரம்..
  • காரணம் என்ன?
காணாமல் போன சிறுமி-காத்திருந்த பேரதிர்ச்சி..! தந்தை கைது..!

Man Killed His 5 Year Old Daughter : உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த மோகித் மிஸ்ரா. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் இவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது . இதனால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். ஆரம்பத்தில் மிக நெருக்கமாக இரு குடும்பங்களும் இருந்த நிலையில் திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மோகித் மிஸ்ராவின் ஐந்து வயது மகள் காணாமல் போய் உள்ளார் . அவரை போலீசார் தேடியுள்ளனர் . அப்பொழுது போலீசாருக்கு சிறுமியின் உடல் பாகங்கள் அடுத்தடுத்து அதே பகுதியில் கிடைத்துள்ளது . இதை அடுத்து சிறுமி காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .

Add Zee News as a Preferred Source

அப்போதுதான் இந்த திடுக்கிடும் உண்மை தெரிய வந்துள்ளது . சிறுமியின் தந்தை திடீரென காணாமல் போய் உள்ளார். உடனே அவரை போலீசார் தேடியுள்ளனர். அதன்பின் அவர் பிடிபட்டுள்ளார் . அப்போது அவரிடம் விசாரித்த போது அவர் அளித்த வாக்குமூலத்தில், தனக்கும் தனது பக்கத்து வீட்டில் இருப்பவருக்கும் பிரச்சனை இருந்ததாகவும் பலமுறை தனது மகளிடம் அவர்களது வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் ஆனால் சொல்பேச்சை கேட்காமல் ஐந்து வயது மகள் அடிக்கடி பக்கத்து வீட்டுக்காரரான ராமு வீட்டிற்கு சென்றதால் ஆத்திரத்தில் மகளை கழுத்தை நெறித்து கொன்றதாகவும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கு நடுவே சிறுமி காணாமல் போனதால் கிட்டதட்ட 100 பேருக்கு மேல் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கடைசியில் சிறுமியை கொலை செய்தது சொந்த தந்தை என்பது தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுமையின் தந்தை மோகித் மிஸ்ரா விடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை இருந்த போது அவர்களது வீட்டிற்கு மகள் சென்றதற்காக ஐந்து வயது சிறுமி என்றும் பார்க்காமல் துடிக்க துடிக்க தந்தையே மகளைக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மருத்துவமனை Bill-ஐ பார்த்தவுடன் கோமாவில் இருந்து எழுந்த இளைஞர்! வைரலாகும் வீடியாே..

மேலும் படிக்க | ஓடும் ரயிலில் முத்தம் கொடுத்த நபர்! வைரலாகும் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News