Drishyam Style Murder In Pune: கமல்ஹாசன் நடித்த பாபநாச படம் எளிதாக மறந்திருக்க கூடிய படம் இல்லை. அப்படத்தில் வரும் சுயம்புலிங்கம் கதாப்பாத்திரம், மகள் செய்த கொலையை குடும்பமே சேர்ந்து, ஸ்கெட்ச் போட்டு மறைத்திருப்பார்க்ள. இந்த படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து, இந்தியாவில் பல மாநிலங்களில் கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், தற்போது அதேபோன்று ஒரு சம்பவம் தான், மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் நடந்துள்து. இதில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனைவியை கொன்ற கணவன்
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே அமராவதியைச் சேர்ந்தவர் சமீர் ஜாதவ். இவரது மனைவி அஞ்சலி சமீர் ஜாதவ் (38). இந்த தம்பதிக்கு 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அஞ்சலி சமீர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீர் ஜாதவ் ஆட்டோமொபையில் டிப்ளமோ படித்து முடித்த அவர், கராஜ் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அக்டோபர் 26 ஆம் தேதி, ஜாதவ் தனது மனைவி அஞ்சலியை வாடகைக்கு எடுத்த ஒரு கிடங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
புதிய கிடங்கை காட்ட விரும்புவதாக கூறி, அவர் மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது, அந்த கிடங்கிற்குள் வந்ததும், மனைவி அஞ்சலியை, அவரது கணவர் சமீர், கழுத்து நெரித்து கொன்றுள்ளார். பின்னர், மனைவியின் உடலை இரும்பு உருக்கும் இயந்திரத்தில் போட்டு ஏரித்துள்ளார். பின்னர், அந்த சாம்பலை அருகிலுள்ள ஆற்றில் வீசியிருக்கிறார். சம்பவம் நடந்த நேரத்தில் இந்த தம்பதியின் குழந்தை தீபாவளிக்காக ஊருக்கு சென்றிருந்தனர்.
மனைவியை கொலை செய்த சமீர், தனது மனைவி காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்ததோடு மட்டுமில்லாமல், அடிக்கடி காவல்நிலையத்திற்கு மனைவியை எப்போது கண்டுபிடித்து தருவீர்கள் என பலமுறை கேட்டு வந்துள்ளார். இவரது செயலில், காவல்துறைக்கு சந்தேகத்தை கிளப்பியது. அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரது வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. அதன்பிறகு, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் அவர் தனது மனைவியை கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.
பாபநாசம் பட பாணியில் நடந்த கொலை
அவர் வாக்குமூலத்தின்படி, 47 வயதான சமீர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது.ஆனால், தனது மனைவி வேறொரு ஆணுடன் உறவில் இருந்ததாகவும், இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இதனால், தான் மனைவியை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனாலும், திட்டப்படி மனைவியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த, அஞ்சலியின் செல்போனில் இருந்து தனது நண்பர்களில் ஒருவருக்கு ஐ லவ் யு என மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு தானே பதிலையும் அவர் அளித்துள்ளார்.
காவல்துறை விசாரணையில் இதனையே அவர் ஆதாரமாக காட்டி நம்ப வைக்க முயன்றுள்ளார். ஆனால், இவரது திட்டம் அனைத்து வீணாகிவிட்டது. அதே நேரத்தில், இவர் கமல் நடித்த பாபநாசம் படத்தை 4 முறை பார்த்து தான், மனைவியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அவர் கூறினார். உண்மைகள் அனைத்து வெளிவந்த நிலையில், சமீரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க : சிறுநீர் கழித்ததால் உயிரிழப்பு.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்... அதிர்ச்சி பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









