8,00000 தெருநாய்கள்.. தங்குமிடங்கள் எங்கே? உச்ச நீதிமன்ற உத்தரவை கேள்வி எழுப்பிய மேனகா காந்தி!

Supreme Court Order On Stray Dogs: மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள் மற்றும் சாலையோரங்களில் இருந்து தெருநாய்களை அகற்றி தங்குமிடங்களில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 7, 2025, 06:08 PM IST
8,00000 தெருநாய்கள்.. தங்குமிடங்கள் எங்கே? உச்ச நீதிமன்ற உத்தரவை கேள்வி எழுப்பிய மேனகா காந்தி!

Stray Dog Verdict: தெரு நாய்கள் தொடர்பான சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தாமாக முன்வந்தது விசாரணைக்கு எடுத்தது. தற்போது தெரு நாய்கள் விவகாரத்தில் மீண்டும் உச்சநீதிமன்றம் போட்டுள்ள கூடுதல் உத்தரவை குறித்து நாய் ஆர்வலார்கள் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர். அதேநேரம் தெருநாய்யால் பதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று உள்ளனர். அதுக்குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மேனகா காந்தி கவலை:

பொது வளாகங்களுக்கு வெளியே சுற்றித் திரியும் இருந்து தெருநாய்களை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மேனகா காந்தி தனது ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இது நடைமுறைக்கு மாறானது என்று கூறினார். விலங்கு தங்குமிடங்கள் போதுமானதாக இல்லாததால், சுமார் 8,00000 தெரு நாய்களில் 5,000 நாய்களை அகற்றுவது சாத்தியமற்றது என்றும், இந்த உத்தரவை முடிவை செயல்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார். இது விலங்கு உரிமை ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் உட்பட அனைத்து பொது நிறுவனங்களிலிருந்தும் தெருநாய்களை அகற்ற வேண்டும் எனவும், தெரு நாய்கள் நுழைவதை தடுக்கும் வகையில்  வேலிகள் அமைத்து பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, "விலங்கு உரிமை ஆர்வலரும் பாஜக தலைவருமான மேனகா காந்தி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி, தெருநாய்களை தங்க வைக்க போதுமான தங்குமிடங்கள் இல்லை என்று கூறினார். 

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "இது நீதிபதி பர்திவாலாவின் முடிவைப் போலவே மோசமானது அல்லது அதை விட மோசமானது. அதை செயல்படுத்த முடியாது. 5,000 நாய்கள் அகற்றப்பட்டால், அவற்றை எங்கே வைத்திருப்பீர்கள்?, 50 தங்குமிடங்கள் தேவை. ஆனால் உங்களிடம் அது கூட இல்லை" என்று கூறினார்.

மேனகா காந்தி மேலும் கூறினார், "அவற்றை பிடிக்க உங்களுக்கு ஆட்கள் தேவை. 5000 தெரு நாய்களை அகற்றுவதால் என்ன வித்தியாசம் ஏற்படும்? இங்கே 8,00000 தெருநாய்கள் இருப்பதால், 5,000 தெரு நாய்களை அகற்றுவதால் என்ன வித்தியாசம் ஏற்படும்? என கேள்வி எழுப்பினார். மேலும் என் கேள்வி என்னவென்றால், இதெல்லாம் சாத்தியம் என்றால், அது முன்பே செய்யப்பட்டிருக்கும்: எனக் கூறினார்.

தெரு நாய்களின் பிரச்சனை: உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வவின் உத்தரவு

- பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள், சாலை போக்குவரத்து அதிகாரிகள் , நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

- நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகள் குறித்து புகார் அளிப்பதற்காக உரிய சிறப்பு அவசர கால எண்ணை ஏற்படுத்த வேண்டும்.

- பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் தெரு நாய்கள் நுழைவதை தடுக்க வேலிகள் அமைத்து பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும்.

- தெரு நாய்கள் நுழைவதை தடுக்க தேவையான அளவு வேலி அமைத்து வளாகங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதா? என்பதை 8 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்.

- நாய்கள் நுழையாமல் தடுப்பதற்காக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளதா? உரிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

- அரசு நிறுவன வளாகங்களில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்ட பின்னர் அவற்றை மறுவாழ்வு மையங்களுக்கு மாற்ற வேண்டும். 

- தெரு நாய்களை பிடித்த அதே பகுதியில் மீண்டும் விடக்கூடாது,. அவ்வாறு பிடிக்கப்பட்ட இடத்திலேயே மறுபடியும் விட்டால் இந்த விவகாரத்தின் மொத்த நோக்கத்தை தோல்வி அடையச் செய்யும்.

- தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

மேலும் படிக்க - தெரு நாய்கள் பாதுகாப்பு எல்லாம் ஓகே... ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய எவ்வளவு செலவாகும் தெரியுமா?

மேலும் படிக்க - கழுத்தை கவ்விய வீட்டு நாய்... கடித்து குதறிய தெரு நாய்கள் - துடிக்க துடிக்க உயிரிழந்த சிறுவன்

மேலும் படிக்க - தெரு நாய்களால்...பிரபலமான நீதிபதி! நன்றிகடன் உள்ளதாக நீதிபதி நகைச்சுவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News