Manipur Fresh Violence: மணிப்பூரில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. மணிப்பூரில் பல்வேறு பள்ளத்தாக்கு மாவட்டங்களில் தற்போது பதற்றமும் அதிகரித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது, இணைய சேவையும் முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது.
Manipur Fresh Violence: தீவிர போராட்டம்
மணிப்பூரில் அரம்பை தெங்கோல் எனும் மெய்தி இன மக்களின் அமைப்பின் தலைவரையும், அதன் மற்ற சில உறுப்பினர்களையும் போலீசார் கைது செய்ததை தொடர்ந்து மணிப்பூரில் நேற்றிரவில் (ஜூன் 7) இருந்து இந்த பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. மெய்தி இன மக்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக போராட்டக்காரர்கள் விமான நிலைய வாயிலை முற்றுகையிடுவது, பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடுவது, சாலையில் டையர்களுக்கு தீ வைப்பது, பழைய பொருள்களுக்கு தீ வைப்பது என தங்களின் தலைவரை விடுதலை செய்யும்படி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Manipur Fresh Violence: தலைவர் கைதா...?
அதிலும் சிலர் தங்களின் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்வோம் என மிரட்டியும் அவர்களது தலைவரை விடுதலை செய்யக்கோரி போராடினர். இதனால், இன்றும் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.
கடந்த சில வருடங்களாகவே மணிப்பூரில் பதற்றம் நிலவி வந்தாலும், தற்போது இந்த வன்முறையானது அரம்பை தெங்கோல் அமைப்பின் தலைவரை கைது செய்ததை தொடர்ந்தே வெடித்திருக்கிறது. ஆனால், காவல்துறையினர் யாரை, எதற்காக கைது செய்தனர் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. கைதானவர் கனான் சிங் என்ற தலைவர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Manipur Fresh Violence: விமான நிலையமும் முற்றுகை
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டக்காரர்கள் சிலர் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குரை லாம்லாங் பகுதியில் நின்றுகொண்டிருந்த பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. குவாகீதெல், பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது, ஆனால் யார் யாரை சுட்டார் என்பது உறுதியாகவில்லை.
கைதான தலைவரை மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு விமானத்தில் அழைத்துச்செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து போராட்டக்காரர்கள் விமான நிலையத்தின் சாலையை முற்றுகையிட்டனர். அதாவது தலைவரை விமானத்தில் அழைத்துச்செல்வதை தடுக்கும் விதமாக அந்த சாலையிலேயே இரவு முழுவதும் படுத்து தூங்கினர்.
Manipur Fresh Violence: அரம்பாய் தெங்கோல் அமைப்பு
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபல், கக்சிங் ஆகிய பள்ளத்தாக்கு மாவட்டங்களிலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இணையம் மூலம் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை முறியடிக்கப்படும் விதமாக இணையம் முடக்கப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபல், கக்சிங், பிஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகள் அடுத்த ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரம்பாய் தெங்கோல் அமைப்பு அதன் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இன்று (ஜூன் 8) முதல் அடுத்த பத்து நாள்களுக்கு முழு அடைப்புப் போராட்டத்தை அந்த அமைப்பு அறிவித்துள்ளது. கலாச்சார மறுமலர்ச்சிக் குழுவாகத் தொடங்கிய இந்த அமைப்பு தொடங்கப்பட்டது, அதன் பின்னர் மணிப்பூரின் வன்முறை சூழலில் ஒரு போராளி குழுவாக பார்க்கப்டுகிறது. இந்தக் குழு சமீபத்தில் ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தங்களின் சில ஆயுதங்களையும் ஒப்படைத்தது.
Manipur Fresh Violence: மணிப்பூரில் தொடரும் பதற்றம்
2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மோதல் சம்பவம் நடந்தேறி வருகிறது. மெய்தி மற்றும் கூக்கி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. அப்போது இருந்து மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு பலரையும் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், இரண்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய மூன்று போராளிகளை பாதுகாப்பு படையினர் நேற்று (ஜூன் 7) கைது செய்தனர். மேலும் தெங்னௌபால் மாவட்டத்தில் சில IED குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். கடந்த பிப்ரவரி மாதம் மணிப்பூரின் முதல்வர் பைரன் சிங் பதவி விலகியதை தொடர்ந்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டுக்கும் தடையா...? அதுவும் 2026 மார்ச் முதலா...? மத்திய அரசு அப்டேட்!
மேலும் படிக்க | RCB-ஐ சேர்ந்த 4 பேர் கைது... யார் நிகில் சோசலே...? இவர் கைது செய்யப்பட்டது ஏன்...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









