ஒரு இந்துவின் உயிரை காத்த 'கல்மா'... அது என்ன? அதை ஏன் தீவிரவாதிகள் கேட்டனர்?

What Is Kalma: பகல்காமில் 'கல்மா'-ஐ ஒப்பிக்காத மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்மா என்றால் என்ன, எதனால் அதனை தீவிரவாதிகள் ஒப்பிக்கச் சொன்னார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 25, 2025, 09:26 AM IST
  • பகல்காமில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.
  • இந்த தாக்குதல் சம்பவத்தில் பல உயிர் தப்பினர்.
  • காயமடைந்தவர்கள் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
ஒரு இந்துவின் உயிரை காத்த 'கல்மா'... அது என்ன? அதை ஏன் தீவிரவாதிகள் கேட்டனர்?

What Is Kalma: 26 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்ட பகல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. தாக்குதல் சம்பவத்தை நேரில் எதிர்கொண்டவர்கள், அதில் இருந்து தப்பித்து உயிர்பிழைத்தவர்கள், கணவனை இழந்தவர்கள், நண்பர் - உறவினர்களை இழந்தவர்கள் என பலரும் சம்பவ இடத்தில் நடந்தது என்ன என்பதை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

Kalma: கல்மா ஒப்பிக்காதவர்களை கொன்ற பயங்கரவாதிகள்

அதிலும் குறிப்பாக, தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்களிடம் குர்ஆனின் வசனமான கல்மாவை (Kalma) ஒப்பிக்கும்படி கூறியுள்ளனர். கல்மா தெரியாமல் ஒப்பிக்காதவர்களை அவர்கள் கொலை செய்துள்ளனர். 

அந்த வகையில் இந்த தாக்குதலில் இருந்து தப்பிய பேராசிரியர் தேபாஷிஷ் பட்டாச்சார்யா, கல்மாவை ஒப்பித்ததன் காரணமாக உயிர்பிழைத்ததாக தெரிவித்துள்ளார். கல்மா என்றால் என்ன, எதனால் அதனை தீவிரவாதிகள் ஒப்பிக்கச் சொல்கிறார்கள் என்ற பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.

Kalma: கல்மா என்றால் என்ன?

கல்மா என்பதை "சாட்சியம்" அல்லது "பிரகடனம்" என்றும் பொருள் கொள்ளலாம். கல்மா என்பது இஸ்லாத்தில் முதல் தூண் ஆகும். இது 1,450 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகத்தால் ஓதப்பட்டது. கல்மா இறைவன் (அல்லாஹ்வின்) ஒருவனே என அறிவிக்கிறது, முஹம்மது தான் அவரது தூதர் என்றும் அறிவிக்கிறது. ஒரு நபர் இஸ்லாமியராக மாறுவதற்கு கல்மாவை ஒரு முறை முழு மனதுடன் ஓதினாலே போதும் என்றும் நம்பப்படுகிறது.

Kalma: அந்த நொடியை நினைவுக்கூர்ந்த பட்டாச்சார்யா

இந்தச் சூழலில், தப்பிய பேராசிரியர் தேபாஷிஷ் பட்டாச்சார்யா கூறியதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்."என்னைச் சுற்றி இருந்த அனைவரும் கல்மாவை ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள். நானும் அதையே ஒப்பிக்க ஆரம்பித்தேன். 
ஒருவர் என் தலையில் துப்பாக்கியைக் காட்டி, நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, பின்னர் நடந்து சென்றுவிட்டார். நான் 'லா இலாஹா' என்று உச்சரித்துக் கொண்டே இருந்தேன்" என அவரது வாழ்வின் மிக கொடூரமான நொடிகளை நினைவுக்கூர்ந்து பேசியிருந்தார். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்து ஆவார். 

Kalma: இஸ்லாத்தில் இது பெரும் பாவம் 

அதேபோல், இஸ்லாமியர்களில் ஷியா பிரிவினர், கூடுதலாக ஒரு வரியையும் கல்மாவில் சேர்த்திருப்பார்கள் - 'அலியுன் வலியுல்லா'. அதாவது "அலி அல்லாஹ்வின் பிரதிநிதி." உலகெங்கிலும் உள்ள சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்கள் இருவரும் கல்மாவை ஓதுகிறார்கள், இது ஒரு பொதுவான மத வெளிப்பாடாக உள்ளது. ஆனால், ஒருவரை கட்டாயப்படுத்தி கல்மாவை ஓதச் சொல்வது என்பதும் இஸ்லாத்தில் பெரும் பாவமாகக் கருதப்படுகிறது. 

Kalma: இது முதல் முறை அல்ல...

கல்மா, இஸ்லாத்திற்கு வெளியே இப்படி பொதுவெளியில் கவனம் பெறுவது இது முதல்முறை அல்ல. கடந்த காலங்களில் இதேபோல் கல்மாவை உச்சரிக்கக் கூறி கட்டாயப்படுத்தி, பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள் தங்கள் தேசியக் கொடிகளில் கல்மாவை பொறித்திருக்கின்றனர். மத அறிவிப்புகள் எப்படி ஒரு ஆயுதமயமாக மாறியுள்ளன என்பதை பகல்காம் தாக்குதல் சம்பவம் வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது.

Palagham Attack: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்

ஜம்மு காஷ்மீர் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரமாக தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது.

இதனால் பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக பல்வேறு அறிவிப்புகளையும் இந்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனலாம். 

சிந்து நதி பாகிஸ்தானின் பரந்த பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது என்பதை இங்கு கவனிக்கத்தக்கது. மேலும், பாகிஸ்தானில் இதனால் விவசாயம், மின் உற்பத்தி போன்றவையும் பாதிப்புக்கு உள்ளாகும். பாகிஸ்தானும் பதிலுக்கு இந்திாவுக்கு எதிராக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இது இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லைகள் மூடப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க |  சிந்து நதி நீர் ஒப்பந்தம்... ரத்து செய்வதன் காரணங்கள் என்ன? - விளக்கிய இந்தியா... தடுமாறும் பாக்.,

மேலும் படிக்க |  இந்தியா பக்கம் நிற்கும் நட்பு நாடுகள்.. போர் வெடித்தால் வெற்றி யாருக்கு?

மேலும் படிக்க |  “தீவிரவாதிகளை வேட்டையாடுவோம்” பல்ஹாம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News