India Pakistan Tension: ஏப்ரல் 22ஆம் தேதி அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் நிலவி வருகிறது.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் ஏற்படும்போது, அதில் இருந்து மக்களை பாதுகாக்க, போர் கால ஒத்திகை பயிற்சிகள் வரும் மே7ஆம் தேதி நாடு முழுவதும் மேற்கொள்ளுமாறு பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
India Pakistan Tension: மாநில அரசுகளுக்கு 5 அறிவுறுத்தல்கள்
இந்த போர் கால ஒத்திகை பயிற்சிகள் என்பது கடைசியாக 1971ஆம் ஆண்டில் நடைபெற்றது. அந்த போர் பயிற்சிக்கு பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது. அந்த வகையில் இந்த போர் கால பயிற்சி ஒத்திகை சார்ந்த உத்தரவு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளிடம் இந்த 5 பாதுகாப்பு ஒத்திகை நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறது.
- வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்குதல்.
- பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மக்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் போன்றோருக்குப் பயிற்சி அளித்தல்.
- தாக்குதலின் போது முக்கியமான கட்டடங்கள், பகுதிகளில் உடனடியாக மின்சாரத்தை துண்டிப்பதன் மூலம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிப்பதற்கான ஒத்திகை.
- நாட்டின் முக்கியமான கட்டடங்கள், தொழிற்சாலைகளை எதிரிகளிடம் இருந்து மறைப்பதற்கான ஒத்திகை.
- தாக்குதலின் போது கட்டடங்களில் இருந்தும், ஒரு பகுதியில் இருந்தும் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை புதுப்பிப்பது மற்றும் அதற்கான ஒத்திகை.
India Pakistan Tension: தணியாத போர் பதற்றம்
பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. பிரதமர் மோடியும் தொடர்ந்து முப்படை தலைமை தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தற்போது நிலவி வரும் போர் பதற்றம் குறையும் வாய்ப்புகளே தென்படவில்லை. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 11 இரவுகளாக எல்லை தாண்டிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
India Pakistan Tension: நேற்று பஞ்சாபில் நடந்த ஒத்திகை
இதைத் தொடர்ந்தே தற்போது போர் கால ஒத்திகை பயிற்சியை நாடு முழுவதும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (மே 4) பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில், இரவு 9 மணி முதல் 9:30 மணி வரை கன்டோன்மென்ட் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஒத்திகையின் திட்டமிடப்பட்ட நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்குமாறு பஞ்சாப் மாநில மின்சார வாரியத்தை அதிகாரி கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து கண்டோன்மென்ட் வாரிய அதிகாரி எழுதிய கடிதத்தில்,"முழு மின் தடையும் இருப்பதால், இந்த காலகட்டத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இந்த ஒத்திகை, நிலவும் போர் அச்சுறுத்தல்களின் போது மின் தடை நடைமுறைகளை செயல்படுத்துவதில் தயார்நிலை மற்றும் செயல்திறனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | இந்தியாவுக்குள் நுழைய முயன்ற... பாகிஸ்தானியர் கைது - எல்லையில் தொடரும் பதற்றம்
மேலும் படிக்க | இந்தியா - பாக். இடையே பதற்றம்: முக்கிய முடிவு என்ன?
மேலும் படிக்க | Video: போர் வந்தாலும் ராணுவத்திற்கு ஆதரவில்லை; பாக்., மக்களின் மனநிலை இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









