)
Pahalgam Attack Latest News in Tamil: ஜம்மு காஷ்மீர் பகல்காம் பயங்கரவாத தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா பயணிகள் 26 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். இதில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அடக்கம்.
Pahalgam Attack News: எல்லையில் நிலவும் பதற்றம்
பகல்காம் தாக்குதலுக்கு லக்ஷர்-இ-தொய்பாவின் துணை அமைப்பாக கருதப்படும் The Resistance Front அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக தகவல்கள் கூறப்படுகிறது. இதனால், இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கிருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் அதிகமாகி உள்ளது. எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்களின் படைகளை தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.
பகல்காம் தாக்குதலை குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. ராணுவத்தில் கடந்த 3 வருடங்களாக ஆட்சேர்க்காமல் இருப்பதே, இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன. மேலும், உளவுத்துறை மீதும் கடும் அதிருப்திகளை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Pahalgam Attack News: 'இந்தியத் தாய் அவமதிக்கப்பட்டார்'
இந்த சூழலில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி (Subramanian Swamy) பகல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என கூறியிருந்தார். அவரது X பதிவில்,"பழிவாங்குவதற்குப் பதிலாக, முதலில் மோடி, அமித்ஷா ராஜினாமா செய்யுங்கள். சீனா, பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் வங்கதேசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவர்கள் பலமுறை சரணடைந்துள்ளனர். இந்தியத் தாய் அவமதிக்கப்பட்டார்" என பதிவிட்டிருந்தார்.
Pahalgam Attack News: 'மோடி எதுவும் செய்ய மாட்டார்'
தொடர்ந்து அவரது பக்கத்தில் மத்திய அரசை குற்றஞ்சாட்டி பதிவிட்டிருந்த நிலையில், நேற்றைய பிரதமர் மோடியின் உரையை விமர்சித்தும் இன்று பதிவு ஒன்றை போட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இன்றைய பதிவில்,"மோடி எதுவும் செய்ய மாட்டார். பீகார் சென்று உரையாற்றுவதற்கு பதிலாக அவர் காஷ்மீருக்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது நாம் நம்பிக்கை இழந்து இதை கடந்த சென்றுவிடுவோம். விஷயம் முடிந்துவிட்டது. மோடி, 'அங்கே ஒன்றுமே நடக்கவில்லை' என்று சொல்லி உங்களைத் தூங்க வைத்துவிடுவார்" என குறிப்பிட்டுள்ளார்.
Pahalgam Attack News: 'பாகிஸ்தானை உடைக்க வேண்டும்'
சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் இருந்துகொண்டே இதுபோன்ற அதிர்ச்சிகர கருத்துகளை தெரிவிப்பது புதிதில்லை. இந்து - இஸ்லாமிய மக்களிடையே அமைதி நீடிக்க வேண்டுமென்றால் பாகிஸ்தானை உடைக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுகிறார்.
இன்று காலையில் அவரது மற்றொரு பதிவில்,"பலுசிஸ்தான், சிந்து, கஃபர் கான் பகுதிகள் மற்றும் எஞ்சிய பஞ்சாப் என பாகிஸ்தானை இரண்டாகப் பிரிக்க வேண்டும். மோடி தலையில்லாத கோழியைப் போல ஓடுவதை நிறுத்த வேண்டும். ஒன்று பாகிஸ்தானை உடைக்க வேண்டும் அல்லது வெளிநாடு செல்ல வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதிகள் யார் யார் என வேட்டையாடப்பட்டு, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ