Rajasthan Family Dress Up With Boy Before Suicide : ராஜஸ்தானில், ஒரு குடும்பமே கடன்தொல்லை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Rajasthan Family Dress Up With Boy Before Suicide : ராஜஸ்தானை சேர்ந்த 4 பேர் கொண்ட குடும்பம், தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த குடும்பம், உயிரிழக்கும் முன்பு குழந்தைக்கு மேக்-அப் செய்து அழகு பார்த்த சம்பவம் பலரது மனதையும் கலங்க வைத்துள்ளது.
4 பேர் பலி!
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உண்டு எனும் கிரமாத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டனர். தங்கள் வீட்டிற்கு வெளியே இருக்கும் ஒரு தண்ணீர் டேங்கில், அப்பகுதியை சேர்ந்த ஷிவ்லால் மேக்வால் (35), கவிதா (32) மற்றும் அவரது 8-6 வயதில் இருக்கும் இரு குழந்தைகள் ஆகியோர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் உயிரிழந்த ஷிவ்லாலின் சகோதரர், தனது அண்ணனுக்கு போன் செய்திருக்கிறார். அவரை எவ்வளவு முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாததால் அருகில் இருப்பவர்களுக்கு போன் செய்து என்ன ஆனது என பார்க்குமாறு கூறியிருக்கிறார். அதன் பிறகு அருகில் இருந்த வீட்டில் இருந்தவர்கள் அவர்களை காணவில்லை என கூறியதால் போலீசாருக்கு தகவல் கொடுக்க பட்டிருக்கிறது.
கடன் தொல்லையால் தற்கொலை!
4 பேரும் குடும்பமாக தண்ணீர் டேங்கில் மிதப்பதை கண்டறிந்த போலீஸார் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பேசி இருக்கின்றனர். உயிரிழந்த ஷிவ்லால் ஜூன் 29ஆம் தேதி அன்றே தற்கொலை கடிதத்தை எழுதி வைத்திருக்கிறார். ஆனால், உடனடியாக அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவரது தாயார் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில், அவரது தந்தையும் மத சார்பான நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் ஷிவ்லால் தனது மனைவி கவிதாவுடன் சேர்ந்து இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்.
கடனை கொடுக்க முடியாத நிலையில் இவர்கள் இருக்கும் போது, கடன் கொடுத்தவர்கள் இவர்களை அடித்து துன்புருத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
குழந்தைக்கு மேக்-அப்..
உயிரிழந்த கவிதா, தனது இளைய மகன் ராம்தேவ்விற்கு பெண் போல வேடமிட்டு இருக்கிறார். துப்பட்டாவை வைத்து புடவை போல கட்டி, கண்களில் மை பூசி, தங்க நகைகள் அணிவித்து அழகு பார்த்திருக்கிறார். அதன் பிறகு, இரு குழந்தைகளுடன் சேர்ந்து இவர்கள், தங்கள் வீட்டிற்கு 20 மீட்டர் தொலைவில் இருக்கும் தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கவிதாவின் உறவினர் இது குறித்து பேசுகையில், இவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்ததாகவும், இதனால் மத்திய அரசின் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வாங்க இருந்ததாகவும் கூறியிருக்கிறார். ஷிவ்லாலின் இந்த முடிவுக்கு அவரது தாயும் தம்பியும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இவர்களை குறிப்பிட்டும் அந்த தற்கொலை கடிதத்தில் ஷிவ்லால் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் குடும்பமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ