உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியை சேர்ந்த 72 வயதுடைய தரம்பால் சிங் என்பவர் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற போது வனப்பகுதிக்கு அருகிலுள்ள கட்டிமுடிக்கப்படாத கட்டடத்தில் வசித்து வரும் குரங்குகள் சரமாரியாக தாக்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிங் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு பதியும் பொருட்டு, குரங்குகள் மீது FIR பதிய வேண்டும் என தரம்பால் சிங்கின் குடும்பத்தினர் போலீசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குரங்குகள் மீது FIR பதிவு செய்ய இயலாது என்று போலீசார் தரப்பில் தெரிவித்ததன் காரணத்தினால், குடும்பத்தினர் போலீஸ் உயரதிகாரிகளுக்கு இது தொடர்பாக கடிதம் எழுத தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் தங்களின் தந்தையின் மரணம் விபத்து என போலீசார் தெரிவிப்பதாகவும், அது விபத்தல்ல கொலை என்றும் கூறியுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட செங்கற்களால் தாக்கப்பட்ட தனது தந்தை உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு துடிதுடித்து இறந்ததாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த குரங்குகளால் மக்கள் பெரும் துயரை அனுபவிப்பதாகவும், அந்த குரங்குகளை பழிவாங்காமல் விட மாட்டேன் என்று தரம்பாலின் குடும்பத்தினர் சபதம் ஏற்றுள்ளனர்.