)
இந்தியாவின் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வு காலத்தை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு "பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்" (PM-SYM) என்ற ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம், சந்தாதாரர் 60 வயதை எட்டிய பிறகு, அவர்களுக்கு மாதம் ரூ.3,000 குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. தெருவோர வியாபாரிகள், வீட்டு பணியாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாய கூலிகள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, முறையான சமூக பாதுகாப்பு இல்லாத நிலையில், அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு நிதி பாதுகாப்பை வழங்குவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இது ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்
சந்தாதாரர் 60 வயதை நிறைவு செய்தவுடன், வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறுவார். சந்தாதாரர் இறந்தால், அவரது வாழ்க்கைத்துணை (கணவன்/மனைவி) ஓய்வூதியத்தில் 50% தொகையை, அதாவது மாதம் ரூ.1,500 குடும்ப ஓய்வூதியமாகப் பெறத் தகுதியுடையவர். இது 50:50 பங்களிப்பு அடிப்படையில் செயல்படுகிறது. சந்தாதாரர் செலுத்தும் அதே தொகைக்கு நிகரான தொகையை மத்திய அரசும் தனது பங்களிப்பாகச் செலுத்தும்.
யாரெல்லாம் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்?
மாதாந்திர சந்தா!
சந்தாதாரரின் பங்களிப்புதொகை, அவர் திட்டத்தில் சேரும் வயதைப் பொறுத்து மாறுபடும். ஒருவர் 18 வயதில் சேர்ந்தால், மாதம் ரூ.55 செலுத்த வேண்டும். 25 வயதில் சேர்ந்தால், மாதம் ரூ.80 செலுத்த வேண்டும். அதுவே 40 வயதில் சேர்ந்தால், மாதம் ரூ.200 செலுத்த வேண்டும். நீங்கள் எவ்வளவு தொகை செலுத்துகிறீர்களோ, அதே அளவு தொகையை அரசும் உங்கள் கணக்கில் செலுத்தும். இந்த சந்தா, சந்தாதாரரின் வங்கி கணக்கிலிருந்து 60 வயது வரை தானாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தில் சேர்வது மிகவும் எளிதானது. உங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre - CSC) அணுகவும். உங்கள் ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு விவரங்களை எடுத்து செல்லவும். பொது சேவை மையத்தின் கிராமப்புற தொழில்முனைவோர் (VLE), உங்கள் விவரங்களை பதிவு செய்து, பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிப்பார். முதல் மாத சந்தாவை ரொக்கமாக செலுத்திய பிறகு, உங்களுக்கான ஷ்ரம் யோகி அட்டை (Shram Yogi Card) மற்றும் பிரத்யேக ஓய்வூதியக் கணக்கு எண் (SYPAN) வழங்கப்படும்.
வெளியேறும் வசதிகள்
திட்டத்தின் வெளியேறும் விதிகள் எளிதாக உள்ளன. 10 ஆண்டுகளுக்குள் திட்டத்தில் இருந்து வெளியேறினால், சந்தாதாரரின் பங்களிப்பு மட்டும் சேமிப்புக் கணக்கு வட்டியுடன் திருப்பி கொடுக்கப்படும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆனால் 60 வயதுக்கு முன் வெளியேறினால், சந்தாதாரரின் பங்களிப்பு மற்றும் அதன் மீது ஈட்டப்பட்ட வட்டி அல்லது சேமிப்பு கணக்கு வட்டி (எது அதிகமோ அது) வழங்கப்படும். சந்தாதாரர் 60 வயதுக்கு முன் இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத்துணை திட்டத்தை தொடரலாம் அல்லது வெளியேறிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ