)
பலருக்கும் வாங்கும் சம்பளத்தை எப்படி சேமித்து வைப்பது என்பது தெரிவதில்லை. தவறான முதலீடுகளில் பணத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானம் தரும் முதலீட்டு திட்டங்களை தேடுபவர்களுக்கு, அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், 5 ஆண்டுகளில் லட்சக்கணக்கில் லாபம் ஈட்ட முடியும்.

2025 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கு, இந்த திட்டத்திற்கான ஆண்டு வட்டி விகிதம் 6.7% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளும் வசதியும் உள்ளது. குறைந்தபட்சம் மாதம் ரூ.100 முதல் முதலீட்டை தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு ஏதுமில்லை. கணக்கு தொடங்கி ஒரு வருடம் முடிந்த பிறகு, உங்கள் வைப்பு தொகையில் 50% வரை கடனாக பெறும் வசதி உள்ளது.
உதாரணமாக, நீங்கள் 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.10,000 இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் மொத்த முதலீடு ரூ.10,000 x 60 மாதங்கள் = ரூ.6,00,000. தற்போதைய 6.7% வட்டி விகிதத்தின்படி, 5 ஆண்டுகளில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி சுமார் ரூ.1,13,659 ஆகும். உங்கள் முதலீடு மற்றும் வட்டி சேர்த்து, 5 ஆண்டுகள் முடிவில் நீங்கள் பெறும் மொத்தத் தொகை ரூ.7,13,659 ஆக இருக்கும். இதன் மூலம், வெறும் 5 ஆண்டுகளில் உங்கள் முதலீட்டின் மீது ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான லாபத்தை ஈட்ட முடிகிறது.
இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு வருமான வரி சட்டம் 80C-யின் கீழ் வரி விலக்கு இல்லை. இருப்பினும், ஈட்டப்படும் வட்டிக்கு வரி உண்டு. ஒரு நிதியாண்டில் வட்டி வருமானம் ரூ.40,000-க்கு மேல் இருந்தால் 10% TDS செய்யப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரிலும் இந்த கணக்கை தொடங்கலாம். இந்த கணக்கை தொடங்க, உங்கள் அருகிலுள்ள அஞ்சல் நிலையத்திற்கு சென்று, தேவையான ஆவணங்களான ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுத்து எளிதாக கணக்கைத் தொடங்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ