)
வெளிநாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவையும் அச்சுறுத்த தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 3000 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நாடு முழுவதும் 363 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3758 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு உலக நாடுகள் உட்பட இந்தியாவை அச்சுறுத்த தொடங்கியது கொரோனா. இந்த தொற்றால் உலக முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தடுப்பூசி மூலம் கொரோனா தொற்றை படிப்படியாக குறைத்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் மக்களை அச்சுறுத்த தொடங்கி உள்ளது கொரோனா தொற்று.
முதலில் ஹாங்காங் போன்ற நாடுகளில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று, தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. அதே சமயம் பாதுகாப்பாக இருக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. மருத்துவமனையில் முக கவசம் கட்டாயம் என்றும் பயணங்களின்போது பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.
அதேபோல், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாதிக்கப்படுவோர் குறித்து தகவல்களை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள், தேவையான படுக்கை வசதிகள், காய்ச்சல் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணியவும் உடனடியாக மருத்துவமனையை அனுகவும் அறிவுறுத்தப்படுகின்றனர். நாட்டில் புதிதாக 363 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3758 ஆக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 1400 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில் 485, டெல்லியில் 436, குஜராத்தில் 320, மேற்கு வங்கத்தில் 287, கர்நாடகாவில் 238 மற்றும் தமிழ்நாட்டில் 199 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ